பார்வை சியாசம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பார்வை சியாசம் (optic chiasm, அல்லது optic chiasma) என்பது இரண்டு பார்வை நரம்புகள் ஆங்கில எழுத்தான X போன்று இணையும் மூளையின் பகுதி ஆகும். இது மூளையின் அடிபக்கம் அதிலும் ஐப்போத்தலாமசு பகுதியின்[1] கீழ் புறத்தில் அமைந்துள்ளது. இந்த பார்வை சியாசம் (optic Chiasm) ஆனது அனைத்து முதுகெலும்புள்ள பிராணிகளின் மூளையிலும் அமைந்துள்ளது, சிலவகை சைக்லோஸ்டோம் வகை (lampreys and hagfishes) கடல் மீன்களில் இது மூளையின் உட்புறத்திலேயே அமைந்திருக்கும். .[2][3]
அமைப்பு
[தொகு]பார்வை சியாசம் பகுதியில் பார்வை நரம்புகளானது இரண்டும் ஒன்றை ஒன்று குறுக்கே வெட்டிக்கொள்ளும் படியான அமைப்பில் அமைந்துள்ளது.
இந்த பார்வை சியாசம் பகுதியில் இணையும் இரண்டு கண்களின் நரம்புகளும் ஒருங்கிணைந்து ஒரே பார்வையினை உருவாக்க இந்த அமைப்பு முறை உயிரினங்களில் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. இப்பகுதியில் உண்டாகும் இரு நரம்புகளின் கூட்டு பார்வை உணர்வு முயற்சியால் தொலை மற்றும் அருகில் உள்ள பொருட்களை வேறுபடுத்தி அவற்றை அவற்றின் தொலைவிற்கு ஏற்ப உற்று நோக்க முடிகிறது. இதனால் இடது கண்ணின் பார்வையினை வலது அரை கோளமும், வலது கண்ணின் பார்வையினை இடது அரை கோளமும் உணர்ந்து நேரானதொரு பார்வையினை நமக்கு வழங்குகிறது.
இந்த பார்வை சியாசம் தகவமைப்பானது முதுகெலும்பி பிராணிகளுக்கு முப்பரிமாண பார்வையினை வழங்க ஏதுவானதாக உள்ளது. இதன் மூலம் மட்டுமேமுதுகெலும்பிகள் காணும் பார்வையில் ஆழங்கள் உள்ளதாக உணர முடிகின்றது. பார்வை சியாசம் பகுதியில் பிணைக்கப்பட்ட அல்லது பிணைப்பில் இருந்து விடுபட்ட வகையிலான நரம்புகளின் தொடர்ச்சி பார்வை உணர் மூளையின் உள் உறுப்புகளை அடைந்து மூளையின் வெளிபுறம் உள்ள பார்வை புறணி (Optical cortex) வரை நீள்கிறது. [4]
மற்ற விலங்குகள்
[தொகு]சியாம் பூனைகள் வகைகளின் சில மரபணு மாற்றங்களான அல்பினோ மரபணுவினில் இந்த பார்வை சியோசம் இணைவானது பாதிப்பினை கொண்டதாக உள்ளது. இத்தகைய பாதிப்பினை கொண்டோர் மாறு கண்(strabismus)உடையவராக அறியப்படுகிறார்.[5]
கூடுதல் படங்கள்
[தொகு]-
திட்டம் காட்டும் மத்திய இணைப்புகளை, கண் நரம்புகள் மற்றும் பார்வை தடங்கள்.
-
அடிப்படை மூளை.
-
3D schematic பிரதிநிதித்துவம் பார்வை தடங்கள்
-
மனித brainstem முன்னுள்ள காண்க
-
Chiasm
-
பார்வை chiasma
-
Cerebrum.தாழ்வான காண்க.ஆழமான இடர்.
-
Cerebrum.தாழ்வான காண்க. ஆழமான இடர்.
வரலாறு
[தொகு]பாரசீக மருத்துவரான ஜெய்ன் அல் டின் கோர்கானி(1042-1137) என்பவரே முதல் முதலில் இந்த பார்வை சியாசம் , பார்வை நரம்பு இணைப்பு பற்றியும் அதனால் உண்டாகும் பார்வைத்தன்மைகளை பற்றியும் கண்டறிந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Colman, Andrew M. (2006). Oxford Dictionary of Psychology (2nd ed.). Oxford University Press. p. 530. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-861035-1.
- ↑ Bainbridge, David (30 June 2009). Beyond the Zonules of Zinn: A Fantastic Journey Through Your Brain. Harvard University Press. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-02042-9. பார்க்கப்பட்ட நாள் 22 November 2015.
- ↑ de Lussanet, Marc H.E.; Osse, Jan W.M. (2012). "An ancestral axial twist explains the contralateral forebrain and the optic chiasm in vertebrates". Animal Biology 62 (2): 193–216. doi:10.1163/157075611X617102. பன்னாட்டுத் தர தொடர் எண்:1570-7555.
- ↑ "eye, human."
- ↑ Guillery, RW; Kaas, JH (June 1973). "Genetic abnormality of the visual pathways in a "white" tiger". Science 180 (4092): 1287–9. doi:10.1126/science.180.4092.1287. பப்மெட்:4707916. Bibcode: 1973Sci...180.1287G. http://www.sciencemag.org/cgi/pmidlookup?view=long&pmid=4707916.
- Jeffery G (October 2001). "Architecture of the optic chiasm and the mechanisms that sculpt its development". Physiol. Rev. 81 (4): 1393–414. பப்மெட்:11581492. http://physrev.physiology.org/cgi/content/full/81/4/1393.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Anatomy diagram: 13048.000-1". Roche Lexicon - illustrated navigator. Elsevier. Archived from the original on 2014-01-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.