பாமிர் ஆறு
Appearance
பாமிர் ஆறு (Pamir river) ஆப்கானித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளில் உள்ள பாமிர் மலைத்தொடர்களில் உற்பத்தியாகும் பனி ஆறு ஆகும். பாமிர் ஆறு பஞ்ச் ஆறுடன் கலக்கிறது. ஆப்கானித்தானின் வக்கான் மாவட்டத்தில் பாயும் பஞ்ச் ஆறு, தஜிகிஸ்தான் நாட்டின் வடக்கு எல்லையாக அமைகிறது.
பாமிர் ஆற்றின் பிறப்பிடம் தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கில் அமைந்த கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணத்தில் உள்ள பாமிர் மலைகள் ஆகும். பின்னர் பாமிர் ஆறு, ஆப்கானித்தான் நாட்டின் கிழக்கில் உள்ள வக்கான் மாவட்டத்தின் தெற்கில் உள்ள வக்கான் ஆற்றுடன் கலந்து பின்னர் பஞ்ச் ஆறு எனும் பெயருடன் பாய்கிறது.[1]
வெளி இணைப்புகள்
[தொகு]- Map of the Gorno-Badakhshan region of Tajikistan பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Aga Khan Development Network: Wakhan and the Afghan Pamir Map at p. 5
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Keay, J. (1983) When Men and Mountains Meet பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-0196-1 Chapter 9