பாமிர் ஆறு

ஆள்கூறுகள்: 37°01′N 72°39′E / 37.017°N 72.650°E / 37.017; 72.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாமிர் மலைகளை உள்ளடக்கிய வக்கான் தாழ்வாரத்தின் வரைபடம்

பாமிர் ஆறு (Pamir river) ஆப்கானித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளில் உள்ள பாமிர் மலைத்தொடர்களில் உற்பத்தியாகும் பனி ஆறு ஆகும். பாமிர் ஆறு பஞ்ச் ஆறுடன் கலக்கிறது. ஆப்கானித்தானின் வக்கான் மாவட்டத்தில் பாயும் பஞ்ச் ஆறு, தஜிகிஸ்தான் நாட்டின் வடக்கு எல்லையாக அமைகிறது.

பாமிர் ஆற்றின் பிறப்பிடம் தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கில் அமைந்த கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணத்தில் உள்ள பாமிர் மலைகள் ஆகும். பின்னர் பாமிர் ஆறு, ஆப்கானித்தான் நாட்டின் கிழக்கில் உள்ள வக்கான் மாவட்டத்தின் தெற்கில் உள்ள வக்கான் ஆற்றுடன் கலந்து பின்னர் பஞ்ச் ஆறு எனும் பெயருடன் பாய்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமிர்_ஆறு&oldid=3814705" இலிருந்து மீள்விக்கப்பட்டது