உள்ளடக்கத்துக்குச் செல்

பாப் சிம்ப்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராபர்ட் பேட்லி சிம்ப்சன் (Robert Baddeley Simpson (பிறப்பு: பிப்ரவரி 3, 1936) நியூ சவுத் வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியத் துடுப்பட்ட அணிக்காக விளையாடிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். 1963/64 முதல் 1967/68 வரை தேசிய அணியின் தலைவராகவும், மீண்டும் 1977-78ல். இவர் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். இவர் பாபி அல்லது சிம்மோ என்றும் அழைக்கப்படுகிறார்.

சிம்ப்சன் வலது கை மட்டையாளர் மற்றும் பகுதி நேர நேர்ச்சுழல் பந்து வீச்சாளராக இருந்தார். ஓய்வுபெற்ற பத்து வருடங்களுக்குப் பிறகு, உலகத் தொடர் கிரிக்கெட்டின் சகாப்தத்தில் ஆஸ்திரேலியாவின் தலைவராக 41 வயதில் விளையாடிய போது பரவலாக அறியப்பட்டார்.

முதல் தரத் துடுப்பாட்டம்

[தொகு]

1952 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் அணி சார்பாக அணிக்கு எதிரான துடுப்பாட்ட போட்டியில் இவர் அறிமுகமானபோது இவரின் வயது 13 ஆகும். நடித்தர மட்டையாளராக அந்தப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். இதற்கு முன்பாக இவர் 12 முதல் தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[1] தனது அணியின் சக வீரர்களை முதன்முறையாக பார்த்த போது அணியின் துணைத் தலைவரான ஆர்தர் மோரிஸ் இவரது அணையாடை எங்கே என கேட்டுள்ளார்.[2] விளையாடும் போது இவரது வயது 16 ஆண்டுகள் 854 நாட்கள் இதன் மூலம் அந்த அணி சார்பாக விளையாடிய இளைய துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.[3] முதலிடத்தில் இருந்த இயான் கிரெய்க் என்பவரை விட இவ்வாறு மூன்று மாதங்கள் இவர் மூத்தவர் ஆவார்.[4] அந்த போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 44 ஓட்டங்களையும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 8 ஓட்டங்கள் எடுத்திருந்தார் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.[5] அந்தப் போட்டியில் பந்து வீச்சில் ஜான்சன் என்பவரது இலக்கினை தனது முதல் இலக்காகக் கைப்பற்றினார்.

தெற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் இவர் 69 ஓட்டங்களை எடுத்தார் .[5] 1953- 54 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அந்த சமயத்தில்  உள்ளூர் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி மிக வலிமையான அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.அந்தத் தொடரின் முதல் போட்டி தவிர மற்ற இரு போட்டிகளிலும் நியூ சவுத் வேல்ஸ் வெற்றி பெற்றது.[5] இவர்களின் மட்டையாளர்கள் மிகவும் திறமையானவர்களாக  இருந்தனர். அதனால் சில வேளைகளில் மட்டுமே மட்டையாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. மொத்தமாக இவர் ஆறு ஆட்டப் பகுதிகளில் மட்டுமே விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 58 மற்றும் 42 ஓட்டங்களை அதிகபட்சமாக இவர் எடுத்திருந்தார் .அந்தத் தொடரில் இவர் மொத்தமாக 147 ஓட்டங்களை எடுத்திருந்தார். மேலும் பந்துவீச்சில் 14 இலக்குகளை கைப்பற்றினார்.[5] ஒரு போட்டியில் 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து நான்கு இலக்குகளை கைப்பற்றினார் .மேலும், மூன்றாவது போட்டியில் 88 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இரண்டு இலக்குகளை கைப்பற்றினார். இந்த இரு போட்டிகளிலும் நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றி பெற்றது.

சான்றுகள்

[தொகு]
  1. Haigh, p. 190.
  2. Haigh, p. 191.
  3. Haigh, p. 28.
  4. Robinson, p. 265.
  5. 5.0 5.1 5.2 5.3 "Player Oracle RB Simpson". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_சிம்ப்சன்&oldid=3986760" இலிருந்து மீள்விக்கப்பட்டது