பாட்லியன் சட்ட நூலகம்
பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) என்பது, இங்கிலாந்தின் ஆக்சுபோர்டில் உள்ள ஒரு கல்விசார் சட்ட நூலகம் ஆகும்.[1] இது ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறைக்கான நூலகமாகவும் உள்ளது. இது இரண்டாம் தரப் பட்டியலிடப்பட்டதும் செயின்ட் கிராசு சாலையில் உள்ளதுமான செயின்ட் கிராசு கட்டிடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.[2]
இந்த நூலகம் ஐரோப்பாவில் உள்ள திறந்த அணுக்க சட்ட நூலகங்களில் ஒன்று. 1964 இல் திறக்கப்பட்ட இந்த நூலகத்தில் 16,000 நீள மீட்டர் தட்டுக்களில் 550,000 க்கு மேற்பட்ட தொகுதிகள் உள்ளன.[3] பாட்லியன் நூலகம் சட்டப்படியான வைப்பகம் என்னும் தகுதி பெற்றது. இதனால், பாட்லியன் சட்ட நூலகம், ஐக்கிய இராச்சியத்திலும், அயர்லாந்திலும் அச்சிடப்படும் எல்லா சட்ட ஆவணங்களிலும் ஒரு படியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hibbert, Christopher, ed. (1988). "Law Library". The Encyclopaedia of Oxford. Macmillan. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-39917-X.
- ↑ "St Cross Building, Oxford". www.buildingcentre.co.uk. Archived from the original on 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-24.
- ↑ "Bodleian Law Library | About Us". www.bodleian.ox.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.