பாட்லியன் சட்ட நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாட்லியன் சட்ட நூலகத்துக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள்.
Bodleian Law Library is located in Oxford city centre
Bodleian Law Library
Bodleian
Law Library
மத்திய ஆக்சுபோர்டில் பாட்லியன் சட்ட நூலகத்தின் அமைவிடம்

பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) என்பது, இங்கிலாந்தின் ஆக்சுபோர்டில் உள்ள ஒரு கல்விசார் சட்ட நூலகம் ஆகும்.[1] இது ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறைக்கான நூலகமாகவும் உள்ளது. இது இரண்டாம் தரப் பட்டியலிடப்பட்டதும் செயின்ட் கிராசு சாலையில் உள்ளதுமான செயின்ட் கிராசு கட்டிடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.[2]

இந்த நூலகம் ஐரோப்பாவில் உள்ள திறந்த அணுக்க சட்ட நூலகங்களில் ஒன்று. 1964 இல் திறக்கப்பட்ட இந்த நூலகத்தில் 16,000 நீள மீட்டர் தட்டுக்களில் 550,000 க்கு மேற்பட்ட தொகுதிகள் உள்ளன.[3] பாட்லியன் நூலகம் சட்டப்படியான வைப்பகம் என்னும் தகுதி பெற்றது. இதனால், பாட்லியன் சட்ட நூலகம், ஐக்கிய இராச்சியத்திலும், அயர்லாந்திலும் அச்சிடப்படும் எல்லா சட்ட ஆவணங்களிலும் ஒரு படியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hibbert, Christopher, தொகுப்பாசிரியர் (1988). "Law Library". The Encyclopaedia of Oxford. Macmillan. பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-39917-X. 
  2. "St Cross Building, Oxford".
  3. "Bodleian Law Library | About Us".