உள்ளடக்கத்துக்குச் செல்

பவுல்-லூயி சைமண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுல்-லூயி சைமண்டு
பவுல்-லூயி சைமண்டு கராச்சியில் பிளேக் தடுப்பூசியை குத்துகிறார் - சூன் 4, 1898
பிறப்பு(1858-07-30)30 சூலை 1858
போஃபோர்ட்-சுர்-ஜெர்வான், டிரோம், பிரான்சு
இறப்பு3 மார்ச்சு 1947(1947-03-03) (அகவை 88)
வாலென்சு, பிரான்சு
வாழிடம்டிரோம், பிரான்சு
தேசியம்பிரான்சியர்
துறைஉயிரியியலாளர், மருத்துவர்
விருதுகள்பார்பியர் பரிசு (1898)

பவுல்-லூயி சைமண்டு (Paul-Louis Simond) பிரான்சிய மருத்துவரும் உயிரியலாளரும் ஆவார். இவர் அரையாப்பு பிளேக் எலிகளிலிருந்து மற்ற எலிகளுக்கும் மனிதர்களுக்கும் பரவ, நோய்தொற்றிய எலிகளில் வாழும் தெள்ளுப்பூச்சிகளே (Xenopsylla cheopis) காரணம் என சோதனைகள் மூலம் நிரூபித்ததற்காக பெரிதும் அறியப்படுகிறார்.

இளமைக் காலம்

[தொகு]

பவுல்-லூயி சைமண்டு பிரான்சின் டிரோம் மாவட்ட (டிபார்ட்மென்ட்) போஃபோர்ட்-சுர்-ஜெர்வானில் சூலை 30, 1858 அன்று பிறந்தார். 1878 முதல் 1882 வரை சைமண்டு பொர்தோவிலுள்ள மருத்துவ, மருந்தியல் பள்ளியில் மருத்துவ, உயிரியல் அறிவியல் துறையில் உதவியாளராக இருந்தார். அங்கிருந்தபோது தனது மருத்துவப் பயிற்சியைத் துவங்கினார். 1882 முதல் 1886 வரை பிரெஞ்சு கயானாவின் செயின்ட்-லோரன்ட்-டு-மரோனியிலிருந்த தொழுநோய் மருத்துவமனையில் இயக்குநராக பணியாற்றினார். அப்போது அங்கு குறைந்த வீரியமுள்ள மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் 1886இல் பொர்தோ திரும்பினார். அடுத்த ஆண்டில் தொழு நோய் குறித்த இவரது ஆய்வேட்டிற்கு பரிசு கிடைத்தது; முனைவர் பட்டமும் பெற்றார்.

பணி வாழ்வு

[தொகு]

மேலும் அறிய

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்-லூயி_சைமண்டு&oldid=3220149" இலிருந்து மீள்விக்கப்பட்டது