உள்ளடக்கத்துக்குச் செல்

பறையன்குளம் எல்லைக் காளி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பறையன்குளம் எல்லைக்காளி
பெயர்
பெயர்:பறையன்குளம் எல்லைக் காளி கோயில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு மாகாணம்
மாவட்டம்:திருக்கோணமலை
கோயில் தகவல்கள்
மூலவர்:காளி

பறையன்குளம் எல்லைக் காளி கோயில்

அமைவிடம்

[தொகு]

திருக்கோணமலை நகரிலிருந்து வடக்கே வவுனியா / அனுராதபுரம் செல்லும் பாதையில் இருபத்தைந்து கிலோமீற்றர் தொலைவில், மொறவெவ பிரதேச சபை அலுவலகத்திற்கு அருகில் முதலிக்குளம் சந்தியில் வலப்புறமாக பிரியும் நல்லகுட்டிஆறு பகுதியூடாக சுமார் பத்துக் கிலோமீற்றர் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஆலய அமைப்பு

[தொகு]

அடர்ந்த காட்டுப் பகுதியில் தகரக் கொட்டகையிலேயே இவ் ஆலயம் அமைந்துள்ளது.

பூசை விழாக்கள்

[தொகு]

மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில் மாத்திரம் பொங்கலும் பூசையும் இடம்பெறுகின்றது. தைப்பூச நாளில் விசேடமாக வழிபாடு நிகழ்கின்றது.

மூலவர்

[தொகு]

சோழர்களின் காவற்தெய்வமாக விளங்கிய கொற்றவை எனும் காளியே இக் கோயிலின் மூலவராவார். எட்டுக்கைகளுடன் உக்கிரமாக காட்சி தரும் தெய்வமாக விளங்குகின்றாள்.