பச்சை விளக்கு (2020 திரைப்படம்)
பச்சை விளக்கு | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | டாக்டர் மாறன் |
தயாரிப்பு | மரு சி. மணிமேகலை பி.எஸ்சி,எம்பிபிஎஸ் |
கதை | டாக்டர் மாறன் |
இசை | தேவேந்திரன் (இசையமைப்பாளர்) |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எஸ். வி. பாலாஜி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | டிஜிதிங் மீடியா ஒர்க்ஸ் |
விநியோகம் | டிஜிதிங் மீடியா ஒர்க்ஸ் |
வெளியீடு | 3 சனவரி 2020 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பச்சை விளக்கு (Pachai Vilakku) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். மாறன் இயக்கி இப்படத்தில் மாறன், தீஷா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இமான் அண்ணாச்சி, தாரா ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.[1] கன்னட நடிகையான ரூபிகா இப்படத்தின் வழியாக தமிழில் அறிமுகமாகினார்.[2]
நடிகர்கள்
[தொகு]- மாறன் அஸ்வின் குமாராக
- தீஷா சுபாசினியாக
- இமான் அண்ணாச்சி, காவல் ஆய்வாளர் விஜயாக
- தாரா வைஷ்ணவியாக
- ரூபிகா பேயாக
- ஸ்ரீ மகேஷ் ராஜசேகர் அல்லது ராபர்ட்டாக
- மனோபாலா பேராசிரியராக
- போஸ்டர் நந்தகுமார் பெரியவராக
- கே. சிவசங்கர் பேராசிரியராக
- நெல்லை சிவா காவல் ஆய்வாளராக
தயாரிப்பு
[தொகு]இப்படமானது சென்னை, தேசிய நெடுஞ்சாலை 45, திருப்போரூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[3]
இசை
[தொகு]இப்படத்திற்கு தேவேந்திரன் நான்கு பாடல்களுக்கு இசை அமைத்தார்.[3]
வெளியீடு
[தொகு]டெக்கான் குரோனிக்கிள் எழுதிய விமர்சனத்தில், "ஒரு இயக்குனராக, அவர் [மாறன்] தீஷா, தாரா மற்றும் பிற புதுமுகங்களிடமிருந்து நல்ல வேலை வாங்கி இருக்கிறார். இமான் அண்ணாச்சி சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் ஒரு நடிகராக, மாறன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திரைக்கதை சில நேரங்களில் கொஞ்சம் பிரசங்கம் செய்கிறது; ஆயினும்கூட, ஒரு நல்ல செய்தியை தெரிவிப்பதற்கான நோக்கம் தெரிகிறது ".[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Subramanian, Anupama (27 December 2019). "Stories like Pachai Vilakku need to be told: Bharathiraja". Deccan Chronicle.
- ↑ Subramanian, Anupama (20 July 2019). "Pachai Vilakku hails traffic policemen". Deccan Chronicle.
- ↑ 3.0 3.1 CR, Sharanya (5 November 2019). "'Pachai Vilakku' deals with road safety". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pachai-vilakku-deals-with-road-safety/articleshow/71893660.cms. பார்த்த நாள்: 19 March 2020.
- ↑ Subramanian, Anupama (4 January 2020). "Pachai Vilakku review: Romancing the traffic". Deccan Chronicle.