பக்ரியா குறிப்பட கோபுரம்
பக்ரியா குறிப்பட கோபுரம் Bahria Icon Tower | |
---|---|
بحریہ آئکون ٹاور | |
சூன் 2021 இல் பக்ரியா குறிப்பட கோபுரம் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவு |
இடம் | பக்ரியா குறிப்பட கோபுரம், #5, தொகுதி 4, சாக்ரா-இ-பிர்தௌசி, கிளிப்டன் கராச்சி, பாக்கித்தான் |
ஆள்கூற்று | 24°48′42″N 67°01′38″E / 24.8117°N 67.0271°E |
கட்டுமான ஆரம்பம் | 2009 |
முகடு நாட்டப்பட்டது | 2017 |
நிறைவுற்றது | 2022 |
செலவு | அமெரிக்க டாலர் 162.5 மில்லியன்[4] |
உரிமையாளர் | பக்ரியா நகரம் |
உயரம் | |
முனை | 305 மீட்டர்கள் (1,001 அடி)[2][3] |
கூரை | 273 மீட்டர்கள் (896 அடி)[1] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 62 + 7 தரையடி |
தளப்பரப்பு | 2,230,500 m2 (24,009,000 sq ft) |
உயர்த்திகள் | 16 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | அர்சத் சாகித் அப்துல்லா நிறுவனம். |
மேம்பாட்டாளர் | பக்ரியா நகரம் |
முதன்மை ஒப்பந்தகாரர் | அபிப் ரபீக் தனியார் நிறுவனம் |
பிற தகவல்கள் | |
தரிப்பிடம் | 1,700 வாகனங்கள் |
வலைதளம் | |
bticon |
பக்ரியா குறிப்பட கோபுரம் (Bahria Icon Tower) பாக்கித்தான் நாட்டின் கராச்சியில் உள்ள கிளிஃப்டனின் கடலோர நகராட்சியில் கட்டப்பட்டுள்ளது. வானளாவிய வளாகமான இந்த கட்டடம் 62-அடுக்கு கோபுரத்தை உள்ளடக்கியுள்ளது. 300 மீட்டர் (980 அடி)[2][3] உயரம் கொண்டு பாக்கித்தானின் மிக உயரமான கட்டிடமாகவும் தெற்காசியாவில் ஐந்தாவது உயரமான கட்டிடமாகவும் சிறப்பு பெற்றுள்ளது.[5][6] வளாகத்திற்கு அருகில் ஒரு 42-அடுக்கு கட்டடத்தையும் உள்ளடக்கியுள்ளது.[7] இது பக்ரியா நகர குழுமத்திற்கு சொந்தமானதாகும்.
அமைவிடம்
[தொகு]உயர்தர கிளிஃப்டன் பகுதியில் இந்த வளாகம் நான்கு ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.[8] 8 ஆம் நூற்றாண்டின் ஆன்மீகவாதியாகவும் கராச்சியின் புரவலர் துறவியாகவும் பரவலாகக் கருதப்படும் அப்துல்லா சா காசியின் [9]நினைவிடத்திற்கும் பாக் இப்னே காசிம் பூங்காவிற்கும் அருகில் இவ்வளாகம் அமைந்துள்ளது.[10]
வரலாறு
[தொகு]பக்ரியா குறிப்பட கோபுரத்தின் கட்டுமானம் 2009 ஆம் ஆண்டு தொடங்கியது.[11] கட்டுமானத்தின் போது, அடித்தளம் அமைப்பதற்கான அகழ்வு பணிகளின்போது போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.[12] 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்தன.[13] நவம்பர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமண மண்டபம் மற்றும் திரையரங்கம் நிறுவப்பட்ட இடத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.[14] பக்ரியா குழுமத்தின் உரிமையாளரான மாலிக் ரியாசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் கட்டுமானத்தின் வேகம் மந்தமடைந்தது.[15]
உள்ளமைப்பு
[தொகு]பிரதான கட்டடத்தின் 10 தளங்களில் பெறுநிறுவன அலுவலகங்கள் அமைந்துள்ளன. 40 தளங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளும், பாக்கித்தானின் மிக உயரமான மொட்டை மாடி உணவகம், இரட்டை அடுக்கு அதிவேக தூக்கிகள், ஒரு பேரங்காடி ஆகியவை இடம்பெரற்றுள்ளன.[16][17][18] 16 அதிவேக உயர்த்திகள், 1700 வாகன நிறுத்துமிடங்கள்[19] என மொத்தமாக 2,230,500 சதுரமீட்டர் (24,008,902 அடிகள்) பரப்பளவில் வானளாவி அமைந்துள்ளது.[19]
வளாகத்தின் 62 அடுக்குகள் தரை மட்டத்திற்கு மேலேயும் 7 அடுக்குகள் தரைமட்டத்திற்கு கீழேயும் அமைந்துள்ளன.[11] செல்போர் நிறுவனத்தின் எஃகு கொள்முதல் செய்யப்பட்டு கண்ணாடி முகப்புடன் வலுவூட்டப்பட்ட கருங்கற்காரையால் வளாகம் கட்டப்பட்டுள்ளது.[20]
விருதுகள்
[தொகு]- இடத்தை திறம்பட பயன்படுத்தியதற்காகவும், பயன்பாட்டை அதிகப்படுத்தியதற்கும் இவ்வளாகம் கட்டடக்கலை வடிவமைப்பு விருதுகளை வென்றது.
- 2012 ஆம் ஆண்டு உயர்தர கட்டிடக்கலைக்கான ஆசியா பசிபிக்கின் பன்னாட்டு சொத்து விருதை இவ்வளாகம் வென்றது.
படக்காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bahria Town ICON - The Skyscraper Center". www.skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
- ↑ 2.0 2.1 "Bahria Town Icon". 9 June 2020.
- ↑ 3.0 3.1 "62-storey Bahria Town Icon reaches structural completion". Pakistan Today. https://archive.pakistantoday.com.pk/2017/10/16/62-storey-bahria-town-icon-reaches-structural-completion/.
- ↑ D4Sys. "Welcome to Costveyors (Pvt.) Ltd.- Bahria Town Icon". Archived from the original on 3 January 2016. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Khurram Shahzad (January 22, 2016). "Country's tallest building 'Bahria Town Icon' inaugurated in Karachi". Daily Pakistan. http://en.dailypakistan.com.pk/pakistan/countrys-tallest-building-bahria-town-icoe-inaugurated-in-karachi/.
- ↑ Sam Neymra (January 24, 2016). "Country's Tallest Building Bahria Icon Tower Inaugurated In Karachi". TheNewsTrack இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160125165948/http://www.thenewstrack.com/countrys-tallest-building-bahria-icon-tower-inaugurated-in-karachi/.
- ↑ "Amp".
- ↑ "Executive Summary" (PDF). Archived from the original (PDF) on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
- ↑ Hasan, Arif (27 April 2014). "Karachi's Densification". Dawn. பார்க்கப்பட்ட நாள் 6 December 2016.
The other site is the over 1,200-year-old tomb of Ghazi Abdullah Shah, a descendant of Imam Hasan. He has become the patron saint of Karachi and his urs is an important event for the city and its inhabitants.
- ↑ Mangi, Faseeh. "In the 'Best Hidden' Frontier Market, a Boom Signals a Pakistan Revival". Bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
- ↑ 11.0 11.1 "Bahria Town Icon, Karachi | 1193055 | EMPORIS". www.emporis.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
- ↑ Faiza Ilyas (July 23, 2014). "Outcry over Clifton high-rise, traffic project during Sepa hearing". Dawn. Dawn Media. http://www.dawn.com/news/1121001.
- ↑ "62-storey Bahria Town Icon reaches structural completion - Pakistan Today". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
- ↑ "Small fire breaks out in Bahria Icon Tower in Karachi's Clifton | SAMAA". Samaa TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
- ↑ Asad, Malik (2020-02-08). "Malik Riaz, others summoned in Bahria Icon Tower reference case". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
- ↑ "90% work completed of Bahria Town Icon, will be inaugurated today - Pakistan - Dunya News". dunyanews.tv. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
- ↑ "Pakistan's tallest building 'Bahria Town Icon' inaugurated". www.thenews.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
- ↑ "Infrastructure development: It's time to fly over Clifton - The Express Tribune". The Express Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
- ↑ 19.0 19.1 "Bahria Town ICON - The Skyscraper Center". www.skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
- ↑ "Cellpor Building Solutions". www.cellpor.com.
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பக்ரியா குறிப்பட கோபுரம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.