பகுப்பு பேச்சு:தமிழக ஊர்களும் நகரங்களும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பை இந்திய நகரங்கள் பகுப்பின் கீழ் இணைப்பது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் இப்பகுப்பில் சிற்றூர்களை பற்றிய கட்டுரைகளும் உள்ளன. ஒருவேளை, இந்திய ஊர்கள் என்று ஒரு பகுப்பு உருவாக்கினால் அதன் கீழ் வகைப்படுத்தலாம். ஆனால், அப்படி இந்திய ஊர்கள் என்று ஒரு பகுப்பு உருவாக்குவது சரியாக இருக்குமா என எனக்குத் தோன்றவில்லை--ரவி (பேச்சு) 17:17, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

இதில் பிரச்சனை என்னவென்றால் ஒரு சில இடங்களை ஊர் என்றழைப்பதா அல்லது நகரம் என்றா என்பது குழப்பமான விஷயம். ஆகவே ஊர்களுக்கும் நகரங்களுக்கும் தனித்தனியான பகுப்புகளை உருவாக்குவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. என்னுடைய ஆலோசனை என்னவென்றால், இந்திய நகரங்கள் பகுப்பு 'இந்திய ஊர்களும் நகரங்களும்' என்றும், இப்பகுப்பு 'தமிழக ஊர்களும் நகரங்களும்' என்றும் பெயர்மாற்றம் செய்யப்பட வேண்டும் (அதாவது அப்பெயர்களில் வேறு பகுப்புகளை உருவாக்கிவிட்டு இப்பகுப்புகளை நீக்கிவிட வேண்டும்). -ஸ்ரீநிவாசன் 13:41, 13 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
இது நல்ல திட்டமாகத் தோன்றுகிறது. இரவி, உங்கள் கருத்து என்ன? -- Sundar \பேச்சு 13:44, 13 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஸ்ரீநிவாசனின் கருத்துடன் உடன்படுகிறேன். தற்பொழுது உள்ள பகுப்புகளை அழிக்காமல், அவற்றை 'தமிழக ஊர்களும் நகரங்களும்' , 'இந்திய ஊர்களும் நகரங்களும்' ஆகிய பகுப்புகளுக்கு நகர்த்தி விடலாம். புதுக்கட்டுரைகளில் இந்த புதிய பகுப்புகளின் பெயர்களை பயன்படுத்தலாம். நேரம் கிடைக்கும் போது பழைய கட்டுரைகளில் பகுப்பு பெயரை இற்றைப்படுத்திவிட்டு அதன் பின் தமிழகத்தைச் சேர்ந்த ஊர்கள், இந்திய நகரங்கள் ஆகிய பகுப்புகளை அழிக்கலாம்--ரவி (பேச்சு) 14:32, 13 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

உரையாடலின்படி புதிய பகுப்புகள் உருவாக்கப்பட்டுவட்டது. இப்போது பழைய பகுப்புகளை அழித்துவிடலாம் அல்லவா? -ஸ்ரீநிவாசன் 14:38, 2 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]