நோடோ பூகம்பம் 2007
நாள் | மார்ச்சு 25, 2007 |
---|---|
தொடக்க நேரம் | 9:41:48 சப்பானிய நேரம் (ஒ.ச.நே + 09:00) |
கால அளவு | 30 செக்கன்கள்[1] |
நிலநடுக்க அளவு | 6.9 Mj (6.7 Mw) |
ஆழம் | 11 km (7 mi) |
நிலநடுக்க மையம் | 37°18′N 136°30′E / 37.3°N 136.5°E |
வகை | தட்டுப் புவிப்பொறை உள்ளிடை நிலநடுக்கம் |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | ஜப்பான் |
அதிகபட்ச செறிவு | MM IX[2] Shindo 6+ |
உச்ச முடுக்கம் | 1.33 g (vector sum) |
ஆழிப்பேரலை | 22 செமீ வரை சூசு |
நிலச்சரிவுகள் | Yes |
பின்னதிர்வுகள் | 500~ |
உயிரிழப்புகள் | 1 உயிரிழப்பு, 356 பேர் காயம்[3] |
நோடோ தீபகற்ப பூகம்பம் அல்லது நோடோ தீபகற்ப நிலநடுக்கம் 2007 (Noto Earthquake) (能登半島地震 Noto hantō jishin?) எனப்படும் இந்த அவநிகழ்வு, ஆசியா கண்டத்தின் சப்பான் நாட்டின் நோடோ தீபகற்ப பகுதியில் 2007 ஆம் ஆண்டு மார்ச்சு 25 ம் திகதி அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி காலை 09:41:58 மணியளவில்,[4] 6.9 என்ற ரிக்டர் அளவின்படி யப்பான்னின் ஹோகுறிக்கு (Hokuriku) என்னும் பிராந்தியத்தை தாக்கியது. அந்த பூகம்பம், வாசிம (Wajima), நானோ (Nanao) போன்ற பெருநகரங்களையும் மற்றும் அனாமிஷூ (Anamizu) என்ற சிறுநகரத்தையும், ஜப்பானிஷ் ஷின்டோ 6+[5] அளவையில் நில அதிர்வுகள் அறியப்பட்டது.இப்பூகம்பத்தில் வாஜிம நகரத்தில் ஒருவர் மரணமடைந்தார் மற்றும் குறைந்தது 356 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளனர் என மூலாதாரம் தெரிவிக்கின்றன.
புவியமைப்பியல்
[தொகு]இந்த பூகம்பம் புவித்தட்டுகள் சமமற்ற நிலையில் நழுவி இடப்பெயர்வின் காரணமாக ஏற்பட்டதென்று ஆய்வில் தெரியவந்துள்ளது.[6] சப்பான் புவிவெளி தகவல் ஆணையத்தின் கூற்றுப்படி, பிளவுப் பெயர்ச்சியின் தாக்கம் 14 கிலோமீட்டர் அகலமும், 21 கிலோமீட்டர் நீளமும், மற்றும் 1.4 மீட்டர் இடம்பெயர்ந்ததாக அறியப்படுகிறது.[7]அட்வான்ஸ் இண்டஸ்ட்ரீயல் சயின்ஸ் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம் என்ற நிறுவனம்கூட இப்பூககம்ப மைய பகுதியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவு தாக்கியதாக ஒலி அலைகள் மூலம் பிளவுப் பெயர்ச்சியை, கணக்கிட்டுள்ளது.[8]
இந்த பூகம்பம், ஒரு தட்டுக்குள்ளான (intraplate) பூகம்பமாகும் இது வட அமெரிக்கா எல்லையின் அருகாமையில் நிகழந்த யுரேசியன் தட்டாகும்.[9] நோடோ தீபகற்ப வண்டல் பகுதி அழுத்தம் உருவாக்கப்பட்டு பல மடிப்புகளை தென்கிழக்கு திசையில் உந்தித்தள்ள தலைகிழ் பிளவுப் பெயர்ச்சிகள் ஏற்படுகிறது.[10] சில நெகிழ்வு தன்மையற்ற நழுவும் தட்டுகள், பிளவுப்பெயர்ச்சிகள் ஊடாக இப்பிராந்தியத்தில் காணப்படுகின்றன அதேபோல் 1993ல் பிப்ரவரி 7 ஆம் திகதி A 6.6 Mj அளவையில் இசிக்கவா (Ishikawa) பகுதியை ஒரு நிலநடுக்கம் தாக்கியதாக அறியப்பட்டது.[11]
1990 ஆம் ஆண்டுகளிலிருந்து 6.0 ~ என்ற அளவைகளில் புவியதிர்ச்சிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சில நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் (Seismologists) ஆராய்ந்து கூறுவது யாதெனில், மேற்கு சப்பான் நில அதிர்வுகளின் செயல்பாடுகள் அதன் உச்சக்கட்ட நிலையில் உள்ளதாகவும், மற்றும் பல பூகம்பங்கள் கிரேட் ஹான்ஷின் (Great Hanshin) போன்று ஏற்படும் என்று கூறப்படுகிறார்கள். இதுபோன்ற நில அதிர்வுகள் பூமி அதிர்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.[12]
2005 ஃப்யூகூவோகா (Fukuoka ) பூகம்பம் போன்றதென்று அறிவித்தது, அங்கே ஒருபகுதியில் நடைபெற்ற நில அதிர்வு செயற்பாட்டை ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது, ஆனால் பூகம்பங்கள் யப்பான் மற்றும் அதனைத் சுற்றியுள்ள எந்தபகுதியிலும் சாத்தியம் என்றே கணித்துள்ளனர். மேலும் இந்த நோடோ நிலநடுக்கம் கடலுக்கு வெளியில் நடந்தது அதனால் உருவாக்கப்பட்ட நில அதிர்வுகள், அபாய வரைபடத்தில் உருவாக்கிய பிளவுப்பெயர்ச்சிகள் முக்கியமாக உள்நாட்டு பிளவுப்பெயர்ச்சிகள் என்பதால் சில நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் இத்தகையதொரு பூகம்பங்கள் மாதியான, அத்துடன் உள்நாட்டு பூகம்பங்கள் உருவாக வாய்ப்புள்ளதென கருதுகின்றனர்.[13]
கால இடைவெளி
[தொகு]2007ல் தாக்கிய நோடோ பூகம்பம் வகையை போன்று கடந்த 20.000 ஆண்டுகால இடைவெளியில் 1~2 முறை ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[14]
புவியியர்பியல் விளைவுகள்
[தொகு]இந்த பூகம்பத்தின்போது, 15 சென்ட் மீட்டர் (15 cm) வடமேற்கிலும், 25 சென்ட் மீட்டர் (25 cm) தென்மேற்கிலும் புவிதட்டுகள் நகர்ந்துள்ளது, மேலும் புவிபெயர்ச்சியில் அரித்து 10 சென்ட் மீட்டர் அளவுக்கு பனி கட்டிகளை மேல்நோக்கி உந்தப்பட்டு வண்டலாக மாற்றியது என ஆய்வறிக்கை உள்ளது.[15]
சான்றுகள்
[தொகு]- ↑ "Earthquakes rock Pacific nations". BBC News. 2007-03-25. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6492473.stm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
- ↑ 2007 Noto earthquake[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Japanese seismic intensity scale". Archived from the original on 2016-12-17. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
- ↑ Geospatial Information Authority of Japan (GSI)
- ↑ Geospatial Information Authority of Japan (GSI)
- ↑ 発表・掲載日:2007/07/30
- ↑ [http://study.com/academy/lesson/north-american-plate-tectonics-movement-facts.html North American Plate: Tectonics, Movement & Facts Chapter 29 /Lesson 8]
- ↑ Japan Worldmark Encyclopedia of Nations | 2007 COPYRIGHT 2007 Thomson Gale.
- ↑ "World Public Library Association". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ Earthquakes & Tsunamis: Causes & Information by Nola Taylor Redd | April 20, 2015 11:02pm ET
- ↑ "World Public Library Association 2007 NOTO EARTHQUAKE". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ aist_j/press_release/pr2007/pr20070730/pr20070730.html 発表・掲載日:2007/07/30
- ↑ GSI Activities