உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுந்தீவு சமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுந்தீவு சமர்
ஈழப் போர் பகுதி
நாள் 25, திசம்பர், 2007
இடம் நெடுந்தீவு, இலங்கை
சர்ச்சைக்குரியது
பிரிவினர்
இலங்கைக் கடற்படை, இலங்கை வான்படை (நெருக்கமான வான் ஆதரவு) கடற்புலிகள்
பலம்
12 விரைவு தாக்குதல் கப்பல்கள், தாக்குதல் உலங்குவானூர்திகள், போர் விமானங்கள் தெரியவில்லை
இழப்புகள்
12 பேர் இறந்ததாக அரசு கூறியது[1][2] ஒரு படகு சேதமடைந்தது, ஒன்று மூழ்கியதாக போராளிகள் கூறினர் 9 படகுகள் மூழ்கியதாகவும், 40 பேர் உயிரிழந்ததாகவும் அரசு கூறுகிறது.

4 பேர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் கூறினர்

நெடுந்தீவு சமர் (Battle of Delft) என்பது 1997, திசம்பர் 25 அன்று நடந்த ஒரு கடற்படை சமராகும். இது இலங்கை உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகும். நெடுந்தீவில் இருந்து படகுக் குழு ஒன்று நகர்வதாகத் தமக்கு தகவல் கிடைத்ததாக இலங்கைக் கடற்படை கூறியது. இதனை ஆராய்வதற்காக கடற்படை விரைந்த பிறகு மோதல்கள் வெடித்து கடுமையான கடல் போர் ஏற்பட்டது. இரு தரப்பினரும் வெற்றி பெற்றதாகக் கூறினர். இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்றை கடற்புலிகள் மூழ்கடித்ததாகவும், இலங்கை கடற்படையினர் உயிரிழந்ததாகவும் விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையதளமான தமிழ்நெட் கூறியது. எனினும், புலிகளின் 6 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுந்தீவு_சமர்&oldid=3996029" இலிருந்து மீள்விக்கப்பட்டது