நீர்ப்புகுதிகள்
Appearance
நீர்ப்புகுதிகள் (Water mass) பெருங்கடலில் நீர்புகுதிகள் என்பது பொதுவான தோற்ற வரலாற்றினைக் கொண்டதும், சுற்றுப்புறத்திலிருந்து பிரித்தறியக்கூடிய இயற்பியல் பண்புகளைப் பெற்றிருப்பதுமான ஒரு கண்டறியக்கூடிய நீர்ப்பகுதியாகும். வெப்பநிலை, உப்புத்தன்மை, வேதி-ஓரிடமூலக விகிதம் மற்றும் இதர இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளது.
பொதுவாக நீர்ப்புகுதிகள் குறிப்பிட்ட வழித்தடங்களாக மட்டும் பிரித்தறியப்படாமல் உலகப்பெருங்கடலிளும் இது பிரித்தறியக்கூடியதாக உள்ளது. செங்குத்து நிலையில் நீர்ப்புகுதிகளை ஆராயும்போது இவை மேல்மட்ட நீர்ப்புகுதிகள், இடைமட்ட நீர்ப்புகுதிகள் மற்றும் ஆழ்மட்ட நீர்ப்புகுதிகள் எனப் பகுத்தறியப்படுகிறது.[1][2]
பொதுவாக உலக பெருங்கடலில் காணப்படும் நீர்ப்புகுதிகள்:
- அந்தாட்டிக்கா கீழ் நிலை நீர் (Antarctic Bottom Water) (AABW),
- வட அட்லாண்டிக் ஆழ் நிலை நீர் (North Atlantic Deep Water) (NADW),
- துருவச் சுற்று ஆழ் நிலை நீர் (Circumpolar Deep Water) (CDW),
- அண்டார்டிக் இடை நிலை நீர் (Antarctic Intermediate Water) (AAIW),
- துணை அண்டார்டிக் வகை நீர் (Subantarctic Mode Water) (SAMW),
- ஆர்க்டிக் இடை நிலை நீர் (Arctic Intermediate Water) (AIW),
- பல்வேறு பெருங்கடல் பள்ளங்களின் மத்திய நிலை நீர் மற்றும்
- பல்வேறு பெருங்கடல்களின் மேல் மட்ட நீர்.