நாற்பண்புகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் என்பவை ஆண், பெண் இருபாலாருக்கும், அவரவர் இயல்புகளுக்கு ஏற்றவாறு இயற்பண்புகளாய் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாக மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட பண்புகளாகும்.
ஆண்களுக்குரிய நாற்பண்புகள்
[தொகு]அறிவு
[தொகு]அறிவு என்பது எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அந்த உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்.
நிறை
[தொகு]நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை என்று பொருள்.
ஓர்ப்பு
[தொகு]ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பதாகும்
கடைப்பிடி
[தொகு]கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை என்று விளக்குகிறது. அதாவது “நன்றென அறிந்த பொருளை மறவாமை”; ஆத்திசூடியும் “நன்மை கடைப்பிடி” என்கிறது.
பெண்களுக்குரிய நாற்பண்புகள்
[தொகு]பெண்களுக்குரியதென மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட அகப்பண்புகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளாகும். முற்போக்குச் சிந்தனைவாதிகளும் பெண்ணிலைச் சிந்தனையாளர்களும் நாற்பண்புகள் குறித்த விபரிப்புகளை அடக்குமுறையின் வடிவம் என மறுதலித்து வருகிறார்கள்.
அச்சம்
[தொகு]அச்சம் என்பது வரவிருக்கும் அபாயம் குறித்து ஏற்படும் மன நடுக்கம் எனப் பொருள்படும். பய உணர்வு என்று கருதப்படும்.
மடம்
[தொகு]மடம் இது மடமை எனவும் கூறப்படும். அறிந்தவொரு விடயத்தைக் கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக்கூறாதத் தன்மை என இது விளக்கப்படுகிறது.
நாணம்
[தொகு]நாணம் என்பது வெட்கப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும்.
பயிர்ப்பு
[தொகு]தாய், தந்தை தவிர்த்து வேற்று நபர் உடல் பரிசம் பட்டதும் ஏற்படும் கூச்ச உணர்வு என இது விளக்கப்படுகிறது.