நானும் சிங்கிள்தான்
நானும் சிங்கிள்தான் | |
---|---|
இயக்கம் | ஆர். கோபி |
தயாரிப்பு | பன்னகைப் பூ கீதா |
கதை | ஆர். கோபி |
இசை | இந்தேஷ் மஞ்சுநாத் |
நடிப்பு | அட்டகத்தி தினேஷ் தீப்தி சதி மொட்டை ராஜேந்திரன் மனோபாலா ரமா |
ஒளிப்பதிவு | கே. ஆனந்தராஜ் |
படத்தொகுப்பு | பி. லெனின் |
கலையகம் | திரீ இஸ் ஏ கம்பெனி புரடக்ஷன் |
வெளியீடு | 12, பெப்ரவரி, 2021 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நானும் சிங்கிள்தான் (Naanum Single thaan ) என்பது 2021 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர ஆர். கோபி இயக்கிய இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், தீப்தி சதி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, விகாஷ் சம்பத், செல்வேந்திரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அறிமுக இயமைப்பாளர் இந்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். கே. ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]
கதைச்சுருக்கம்
[தொகு]ஆண் இல்லாமல் வாழமுடியும் என்று நினைக்கும் ஒரு பெண், முப்பது வயதுக்குள் திருமணம் முடிக்கவேண்டும் என்று நினைக்கும் நினைக்கும் ஓரு ஆண். இருவேறு துருங்களாக இருக்ககும் இவர்கள் வாழ்வில் இணைந்தார்களா என்பதை சொல்லுவதே இப்படத்தின் கதையாகும்.
நடிகர்கள்
[தொகு]- அட்டகத்தி தினேஷ்
- தீப்தி சதி
- மொட்டை ராஜேந்திரன் மிஸ்டர் லவ்வாக
- மனோபாலா
- ரமா
- ஆதித்யா
- விகாஷ் சம்பத்
- செல்வேந்திரன்
இசை
[தொகு]இப்படத்திற்கான இசையை ஏ. ஆர். ரகுமானிடம் உதவியாளராக இருந்த இந்தேஷ் மஞ்சுநாத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.
வெளியீடு
[தொகு]இப்படமானது 12, பெப்ரவரி, 2021 அன்று வெளியானது. தினமலரில் வெளிவந்த விமர்சனத்தில் படத்திற்கு 5க்கு 1.5 மதிப்பெண்ணைக் கொடுத்தது. இரட்டை அர்த்த வசனங்களோடு படம் எடுத்தால் இளைஞர்களைக் கவர்ந்துவிடலாம் என்று இயக்குநர் கருதியுள்ளதாக குறைகூறியுள்ளது. நாயகன் தினேஷ் வசனங்களை தடுமாறாமல் சிறப்பாக பேசவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "filmnews24x7.com பார்த்த நாள் 2021 பெப்ரவரி 14". Archived from the original on 2021-02-13. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
- ↑ நானும் சிங்கிள்தான், விமர்சனம், தினமலர், பார்த்த நாள் 2021 பெப்ரவரி 4