நானும் சிங்கிள்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானும் சிங்கிள்தான்
இயக்கம்ஆர். கோபி
தயாரிப்புபன்னகைப் பூ கீதா
கதைஆர். கோபி
இசைஇந்தேஷ் மஞ்சுநாத்
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
தீப்தி சதி
மொட்டை ராஜேந்திரன்
மனோபாலா
ரமா
ஒளிப்பதிவுகே. ஆனந்தராஜ்
படத்தொகுப்புபி. லெனின்
கலையகம்திரீ இஸ் ஏ கம்பெனி புரடக்‌ஷன்
வெளியீடு12, பெப்ரவரி, 2021
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நானும் சிங்கிள்தான் (Naanum Single thaan ) என்பது 2021 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர ஆர். கோபி இயக்கிய இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், தீப்தி சதி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, விகாஷ் சம்பத், செல்வேந்திரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அறிமுக இயமைப்பாளர் இந்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். கே. ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

ஆண் இல்லாமல் வாழமுடியும் என்று நினைக்கும் ஒரு பெண், முப்பது வயதுக்குள் திருமணம் முடிக்கவேண்டும் என்று நினைக்கும் நினைக்கும் ஓரு ஆண். இருவேறு துருங்களாக இருக்ககும் இவர்கள் வாழ்வில் இணைந்தார்களா என்பதை சொல்லுவதே இப்படத்தின் கதையாகும்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கான இசையை ஏ. ஆர். ரகுமானிடம் உதவியாளராக இருந்த இந்தேஷ் மஞ்சுநாத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.

வெளியீடு[தொகு]

இப்படமானது 12, பெப்ரவரி, 2021 அன்று வெளியானது. தினமலரில் வெளிவந்த விமர்சனத்தில் படத்திற்கு 5க்கு 1.5 மதிப்பெண்ணைக் கொடுத்தது. இரட்டை அர்த்த வசனங்களோடு படம் எடுத்தால் இளைஞர்களைக் கவர்ந்துவிடலாம் என்று இயக்குநர் கருதியுள்ளதாக குறைகூறியுள்ளது. நாயகன் தினேஷ் வசனங்களை தடுமாறாமல் சிறப்பாக பேசவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "filmnews24x7.com பார்த்த நாள் 2021 பெப்ரவரி 14". Archived from the original on 2021-02-13. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  2. நானும் சிங்கிள்தான், விமர்சனம், தினமலர், பார்த்த நாள் 2021 பெப்ரவரி 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானும்_சிங்கிள்தான்&oldid=3931688" இலிருந்து மீள்விக்கப்பட்டது