நாகூர் ரூமி
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
இந்தக் கட்டுரை நாகூர் ரூமி உடன் நெருக்கமானவரால் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.(சூன் 2024) |
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி (பிறப்பு: மார் 23, 1958) தமிழக எழுத்தாளர்.
இவர் ஷாஹுல் ஹமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ்
-
Nagore Rumi-2
-
Religious Harmony Award
இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை] திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை] கவிதை, கட்டுரை,[1] நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 72 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படdவை.
இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தினமணி டாட்.காமின் ஜங்ஷனில் இவர் எழுதிய ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் நலம் நலமறிய ஆவல் என்ற நூலாக தினமணியின் வெளியீடாக பிரசுரமானது.
இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்கிற நூல், இசுலாத்தைக் குறித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டது. அடுத்த வினாடி, ”இந்த விநாடி”, ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ், “மேஜிக் ஏணி” ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களாகும்.
மொழிபெயர்ப்பு
[தொகு]சிக்மண்ட் ஃப்ராய்டின் உலகப்புகழ் பெற்ற The Interpretation of Dreams நூலைச் சுருக்கமான கனவுகளின் விளக்கம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் கதைகள் கவிதைகள் என்ற பெயரில் மஸ்னவி காவியத்திலிருந்து சூஃபி கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். பாகிஸ்தான் அரசுத்தலைவர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய சுயசரிதையான In the Line of Fire என்பதன் தமிழாக்கம் இவர் செய்த அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு ஆகும்.[சான்று தேவை] உடல் மண்ணுக்கு என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. ஹோமரின் 'இலியட்' காவியத்தையும் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். The Rules of Wealth என்ற நூலை பியர்சனுக்காக ”செல்வம் சேர்க்கும் விதிகள்” என்ற தலைப்பிலும், பாரக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலை “நம்மால் முடியும்” என்ற தலைப்பிலும் கிழக்கு வெளியீடாகவும் தமிழாக்கம் செய்துள்ளார்.
விருதுகள்
[தொகு]- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்காக, 2004[2]
- நல்லி திசையெட்டும் விருது, ஹோமரின் இலியட் காவிய மொழியாக்க விருது, 2009
- இலக்கியச் சுடர் விருது, 2009
- சிராஜுல் மில்லத் மதநல்லிணக்க விருது, 2017
- சிறந்த கட்டுரையாளர், சுகி. சுப்ரமணியன் நூற்றாண்டு விருது, 2017.
இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள்
[தொகு]- நதியின் கால்கள் (கவிதை, ஸ்நேகா, சென்னை)
- ஏழாவது சுவை (கவிதைத் தொகுதி, சந்தியா, சென்னை)
- குட்டியாப்பா (சிறுகதைகள், ஸ்நேகா, சென்னை)
- கப்பலுக்குப் போன மச்சான் (நாவல், சந்தியா, சென்னை)
- திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு, சந்தியா, சென்னை).
- திராட்சைகளின் இதயம் (நாவல்,கிழக்கு மற்றும் சிக்ஸ்த்சென்ஸ், 2012, 2013, சென்னை)
- இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் (ஆன்மிகம், கிழக்கு, சென்னை)
- அடுத்த விநாடி - 2007 (கிழக்கு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
- ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் (மாணவர்களுக்கு)
- காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை (கிழக்கு, சென்னை)
- கொல்லப் பிறந்த கொடுங்கோலன் (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம், சென்னை).
- ஆல்ஃபா தியானம் - (ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு, சென்னை 2007).
- நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம், சென்னை).
- மேஜிக் ஏணி, ப்ராடிஜி, சென்னை
- முற்றாத புள்ளி (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை).
- சொற்களின் சீனப்பெருஞ்சுவர் (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை).
- சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் (கிழக்கு, சென்னை, 2008)
- சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் (சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, 2016)
- இலியட் (குழந்தைகளுக்கான காவிய அறிமுகம். ப்ராடிஜி, சென்னை)
- HIV எய்ட்ஸ் (மினிமாக்ஸ், அக்டோபர், 2008,சென்னை)
- சொல்லாத சொல் (கவிதை, நேர்நிரை, டிசம்பர், 2009 சென்னை.)
- மென்மையான வாள் (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2011,சென்னை)
- ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், ஆகஸ்ட் 2015,சென்னை)
- முத்துக்கள் பத்து (அம்ருதா பதிப்பகம், 2015,சென்னை)
- மந்திரச்சாவி (கல்கி, சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை, டிசம்பர் 2012, 2016)
- வரலாறு படைத்த வரலாறு ( சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை,2016)
- மாற்றுச்சாவி (கிழக்கு, சென்னை, 2016)
- இந்த விநாடி (சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2014)
- அதே வினாடி (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், 2015,சென்னை)
- நாகூர் நாயகம் அற்புத வரலாறு (கதவுகள், சென்னை, 2007)
- வெற்றிக்கொடி கட்டு ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2012)
- தாயுமானவள் (அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, 2013)
- கதைகதையாம் காரணமாம் ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2018)
- நலம் நலமறிய ஆவல் (பின்னாக்கில் புக்ஸ், 2018)
- சிலையும் நீ சிற்பியும் நீ (கிழக்கு, சென்னை, 2018)
- சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் (தி இந்து, 2018)
- நபிமொழிக்கவிதைகள் (வானவில், சென்னை, 2019)
- நிஜாமுத்தீன் அவ்லியா (கிழக்கு, சென்னை, 2019)
- குணங்குடி மஸ்தான் சாஹிப் (கிழக்கு, சென்னை, 2020)
- புறாக்கள் கட்டிய மாளிகை (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2019)
- நாகூர் ரூமி கதைகள் (வானவில், சென்னை 2020)
- குணங்குடி மஸ்தான் சாஹிப். (கிழக்கு, சென்னை 2020)
- தாஜுத்தீன் பாபா. (கிழக்கு, சென்னை 2021)
- உமர் கய்யாமின் ருபாயியாத். (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2021)
- உடல் எனும் ஞானி (பாகம் 1). (சீர்மை, ஜனவரி 2022)
- உடல் எனும் ஞானி (பாகம் 2). (சீர்மை, ஜனவரி, 2022)
- அஞ்சுகறி சோறு. (வானவில், 2022)
- யாஸீன் மௌலானா நாயகம். (கிழக்கு, சென்னை 2022)
- ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் (கிழக்கு, சென்னை டிசம்பர் 2022)
- தஃப்லே ஆலம் பாதுஷா (கிழக்கு, சென்னை 2023)
- ஷாஹ் வலியுல்லாஹ் (கிழக்கு, சென்னை 2023)
- வரலாறு தரும் பாடம் (கிழக்கு, டிசம்பர் 2023)
- ஏர்வாடி மகான் சையித் இப்ராஹீம் ஷஹீத் (கிழக்கு, டிசம்பர் 2023)
- புல்லாங்குழலின் புலம்பல் (ஃபஹீமிய்யா பதிப்பகம், ஜனவரி 2024)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- உடல் மண்ணுக்கு (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்): கிழக்கு, சென்னை.
- இலியட் -- ஹோமரின் காவியம், கிழக்கு, சென்னை.
- கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள், சந்தியா, சென்னை.
- உமர் கய்யாமின் ருபாயியாத், ஆரூத் புக்ஸ்,சென்னை.
- கனவுகளின் விளக்கம், சிகமண்ட் ஃப்ராய்ட், ஸ்நேகா,சென்னை, அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி.
- செல்வம் சேர்க்கும் விதிகள், ரிச்சர்ட் டெம்ப்ளர்(கிழக்கு, சென்னை, 2009), கிழக்கு. சென்னை
- நம்மால் முடியும், பராக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலின் தமிழாக்கம் (கிழக்கு, சென்னை, 2009)
- என் பெயர் மாதவி, சுசித்ரா பட்டாச்சார்யாவின் வங்காளச் சிறுகதைகள் தமிழாக்கம் (அம்ருதா, சென்னை 2010)
- இதயத்தை நோக்கித் திரும்புதல் (கிழக்கு, சென்னை, 2017)
ஆங்கில நூல்கள்
[தொகு]- HIDAYATUL ANAM (From Tamil to English)
- THE CAT AND THE SEA OF MILK (A Comparative Study of Kamban and Milton)
- Value Education (A Text-book for UG First Year Students of Thiruvalluvar University, Vellore, Pub. Kathavugal, Chennai, 2009)
- YOU ARE YOUR FUTURE (Karaikudi Alagappar Pathippagam, 2012)
- Alpha Meditation An Introduction (Sixthsense Publications, Chennai, 2012)
- The Ocean of Miracles: Life of Qadir Wali of Nagore (Kathavugal Publications, Chennai, 2014)
- Prabakaran Entry and Exit (Translation from Tamil), Amazon
- Prophetic Traditions in Verse, Select Ahadith in the form of simple English poems, Pub. Sixthsense, Chennai, 2019)
- You are Your Fortune, Amazon.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நாகூர் ரூமி", Hindu Tamil Thisai, பார்க்கப்பட்ட நாள் 2024-05-27
- ↑ "நாகூர் ரூமி". தினமணி. https://www.dinamani.com/junction/junction-finished-serials/varalaaru-padaitha-varalaaru/2015/Mar/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-1090715.html. பார்த்த நாள்: 27 May 2024.