நளினி சந்திரன்
நளினி சந்திரன் (Nalini Chandran) 1978-இல் அரி சிறீ வித்யா நிதி பள்ளியினை நிறுவிய இந்தியக் கல்வியாளர் ஆவார்.[1]
இளமை
[தொகு]நளினி சந்திரன் கேரளாவின் பாலக்காட்டில் உள்ள செர்புளச்சேரியில் பிறந்தார். இவர் பேராலய & ஜான் கானான் பெண்கள் பள்ளி மற்றும் மும்பை எல்பின்சுடோன் கல்லூரியில் படித்தார். இவர் ஒரு தகுதி வாய்ந்த நடனக் கலைஞர், நடன இயக்குநர், நாடக கலைஞர் மற்றும் குழந்தைகளுக்கான கதைகளை எழுதுபவர். இவர் படைத்தளபதி சந்திரனை மணந்தார்.[2] இந்த இணையருக்கு தீப்தி மேனன், நீமா வர்மா மற்றும் பாவனா நாயர் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் வசித்து வருகிறார்.
பணி
[தொகு]நளினி சந்திரன் இந்தியத் தரைப்படையில் பணிபுரிந்த தனது கணவருடன் இந்தியாவில் பல பள்ளிகளில் பணிபுரிந்தார். இந்தியா முழுவதும் உள்ள இராணுவ நல மையங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். பல ஆண்டுகளாக, நளினி பல்வேறு பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் வரலாறு பாடங்களைக் கற்பித்துள்ளார். 1983ஆம் ஆண்டில், இவரது கணவர் இந்தியத் தரைப்படையிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றார். மேலும் இவரது வற்புறுத்தலின் பேரில், இவர் அரி ஐறீ வித்யா நிதி பள்ளியை நிறுவினார்.[1]
நளினி 1983 முதல் 1995 வரை மற்றும் 1999 முதல் 2000 வரை இரண்டு முறை அரி சிறீ வித்யா நிதி பள்ளியின் முதல்வராக பணியாற்றினார். தற்போது, நளினி அரி சிறீ வித்யா நிதி பள்ளியின் இயக்குநராகத் தொடர்கிறார். மேலும் இப்பள்ளியின் செயல்பாட்டை மேற்பார்வையிட்டு வருகிறார். இவர் திருச்சூரில் உள்ள சாந்தீபனி வித்யா நிகேதனின் கெளரவ இயக்குநராகவும், கேரளாவில் உள்ள கலாச்சார அறக்கட்டளையான 'தாலம்' தலைவராகவும் உள்ளார்.[1]
விருதுகள்
[தொகு]நளினி 2005-இல் தி ரங்கோஜ்வாலா விருது விருதினையும், 2009-இல் சிறந்த கற்பித்தலுக்கான குருவர் விருதினையும்,[3] 2013ஆம் ஆண்டு நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகக் கேரள சங்கீத நாடக அகாதமி விருதினையும்,[4] திரிச்சூர் மருத்துவ சங்கம் வழங்கிய சாசனம் விருது[1] மற்றும் மனோரமா-ஏர் இந்தியா போல்ட் விருதினையும் பெற்றுள்ளார்.[1] நளினி திரோசியோ விருதை[5] வென்ற கேரளாவைச் சேர்ந்த முதல் பெண் ஆவார்.[1][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 thpar (2005-12-30). "Young World : Teacher par excellence — educationist of worth". தி இந்து. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.
- ↑ incrediblewomenofindia (2015-03-29). "NALINI CHANDRAN". Incredible Women Of India. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.
- ↑ 3.0 3.1 "Kerala / Thrissur News : Award for eminent educationist". தி இந்து. 2005-12-22. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gurupooja, Awards, Kerala Sangeetha Nadaka Akademi, Culture Department". www.keralaculture.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.
- ↑ Keralam, Haindava (2005-12-18). "Smt. Nalini Chandran wins the Dorezio Award" (in en-US). Haindava Keralam. http://www.haindavakeralam.com/smt-nalini-chandran-wins-hk19778.