உள்ளடக்கத்துக்குச் செல்

நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி

ஆள்கூறுகள்: 11°07′52″N 78°33′58″E / 11.131093°N 78.5661°E / 11.131093; 78.5661
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி.
நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி is located in தமிழ் நாடு
நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி
தமிழ்நாட்டில் அமைவிடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திருச்சி
புவியியல் ஆள்கூறுகள், தமிழ்நாடு, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்11°07′52″N 78°33′58″E / 11.131093°N 78.5661°E / 11.131093; 78.5661
சமயம்இசுலாம்

நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி நகரில் சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் வளாகத்தில் நத்தர்ஷா வலி தர்காவும் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

சுமார் 1100 வருடங்களுக்கு முன்பு நத்தர்ஷா வலி எனும் இசுலாமிய சூபி மகான் தனது சுல்தான் பதவியை தனது சகோதரருக்கு கொடுத்து விட்டு தமிழ்நாட்டில் திருச்சிக்கு வந்து மக்களுக்கு போதனைகள் செய்தார். அவரது போதனை மூலம் பலர் இசுலாம் மதத்தை ஏற்றனர்.அவர் இறந்த பின் அவரை திருச்சியிலே அடக்கம் செய்தனர்.அவரது அடக்கத்தலம் அருகிலேயே பள்ளிவாசல் கட்டப்பட்டது.அப்பள்ளிவாசல் நத்தர்ஷா வலி பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.[1]

சந்தனக்கூடு

[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா அன்று அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்கூடு இரவு 10 மணிக்கு மேல் காந்தி மார்க்கெட் ஆர்ச்சில் இருந்து துவங்கி பெரியகடைவீதி, சிங்காரதோப்பு வழியாக வலம் வந்து அதிகாலை பள்ளிவாசலை அடையும்.[2][3]ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசல் தர்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mosques in Trichy". trichyonline.in.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா - தினத்தந்தி". மே 21, 2019.
  3. "திருச்சி நத்தர்ஷா பள்ளி வாசலில் சந்தனக்கூடு உரூஸ் விழா". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2015.[தொடர்பிழந்த இணைப்பு]