தோபரீனர் விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாபரீனர் விளக்கு

தோபரீனர் விளக்கு (Döbereiner's lamp), என்பது 1823 ஆம் ஆண்டு ஜெர்மானிய வேதியியலாளர் ஜோகன் தோபரீனர் என்பவரால் உருவாக்கப்பட்ட தீயுண்டாக்கி ஆகும். இந்த அமைப்பானது பிரஸ்டன்பெர்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1800 ஆம் ஆண்டு வரை தயாரிப்பில் இருந்து வந்த விளக்கு அல்லது தீயுண்டாக்கியை அடிப்படையாக் கொண்டது. இது கலனின் அடிப்படையில் கிப் உபகரணத்தை ஒத்ததாகும். இந்த உபகரணமானது துத்தநாக உலோகம் நீர்த்த கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து ஐதரசன் வாயுவைத் தருவதற்காக வடிவைமக்கப்பட்ட உபகரணமாகும். ஒருபோக்கியானது திறக்கப்படும் போது ஐதரசன் தாரையானது பிளாட்டினம் நுரைப்பஞ்சில் வெளியாகிறது. வளிமண்டல ஆக்சிசனால் வினை தூண்டப்பட்டு வினையூக்கியானது வெப்பப்படுத்தப்பட்டு ஐதரசனானது ஒரு சுடரை உருவாக்குகிறது.

  • a. கண்ணாடி உருளை
  • b. திறந்த பாட்டில்
  • c. கம்பி
  • d. துத்தநாகம்
  • e. நிறுத்து அடைப்பான்
  • f. நுனிக்குழல்
  • g. பிளாட்டினம் நுரைப்பஞ்சு

குழாய்களை தீப்பற்றுவதற்காக வணிகப்படுத்தப்பட்டது. இவ்வகை தீமூட்டிகளைத் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாராக எய்ன்ரிச் காட்ஃபிரைடு ஜெர்மனியின் துரிங்கியாவில் உள்ள ஸ்லெய்சு இருந்தார்.[1]. 1820 களில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான இவ்வகை தீமூட்டிகள் விற்றுத்தீர்ந்தன என கூறப்படுகிறது.[2]

இவ்வகை தீமூட்டிகளின் மாதிரிகள் இடாய்ச்சு அருங்காட்சியகம் மற்றும் எய்டல்பெர்க் கோட்டையில் உள்ள ஒரு பழைய மருந்தகம் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Thomas, John M. (2017). The RSC Faraday prize lecture of 1989. Chem. Commun. Volume 53. p. 9189.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link)
  2. Principles and Practice of Heterogeneous Catalysis. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527314584.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோபரீனர்_விளக்கு&oldid=2791540" இலிருந்து மீள்விக்கப்பட்டது