தோடு ஆர். இலவுவேர்
பிறப்பு | 1957 (அகவை 66–67)[சான்று தேவை] Ohio[சான்று தேவை] |
---|---|
குடியுரிமை | United States |
தேசியம் | American |
துறை | Astronomy |
நிறுவனம் | NOAO Princeton University |
Alma mater | Caltech UC Santa Cruz |
துறை ஆலோசகர் | Sandra M. Faber |
பரிசுகள் | NASA Medal for Exceptional Scientific Achievement (1992) |
தோடு ஆர். இலவுவேர் (Tod R. Lauer) (பிறப்பு 1957) ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். அபுள் விண்வெளித் தொலைநோக்கி பரந்த புலக் கோள் கேமரா குழுவில் உறுப்பினராக இருந்த இவர் , நியூக்கர் குழுவின் நிறுவன உறுப்பினரும் ஆவார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் பால்வெளிகளின் மையங்களில் உள்ள பெரிய கருந்துளைகளுக்கான நோக்கீட்டுத் தேடல்கள் , நீள்வட்டப் பால்வெளிக்களினன்டட்டமைப்பு , விண்மீன்களின் எண்ணிக்கை , அண்டத்தின் பேரியல் கட்டமைப்பு, வானியல் படிமச் செயலாக்கம் ஆகியவை அடங்கும்.[1][2] நான்சி கிரேசு உரோமன் விண்வெளித் தொலைநோக்கி பயணத்தின் முன்னோடிகளில் ஒன்றான ஜேடிஇஎம் திட்டக் கருத்துப்படிம ஆய்வின் முதன்மை ஆய்வாளராக இருந்தார்.[3] 3135 இலவுவேர் என்ற சிறுகோள் இவரது நினைவாக பெயரிடப்பட்டது. நேக்கடு சயின்சு என்ற ஆவணப்படத் தொடரின் ஒரு அத்தியாயத்தில் இவர் தோன்றுகிறார்.[4] புளூட்டோ மற்றும் சாரோனின் குறிப்பிடத்தக்க தெளிவான கணிதத் துல்லியமான படங்களை வழங்கும் நியூ ஒரைசன்சுத் தரவுகளுக்கு ஆழமான விண்வெளி படிமமாக்கம் குறித்த தனது விரிவான பட்டறிவைப் பயன்படுத்துவதற்காக அவர் நியூ ஒரைசன்சு புளூட்டோ குழுவில் சேர்ந்தார்.
இளமையும் கல்வியும்
[தொகு]இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் வானியல் பயின்றார். இவர் 1979 இல் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டில் இவர் கலிபோர்னியா சாந்தா குரூசு பல்கலைக்கழகத்தில் நீள்வட்டப் பால்வெளிகளின் உயர் பிரிதிற மேற்பரப்பு ஒளி அளவீட்டிற்காக வானியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]ஒரு சிறுகோள் (3135) இலவுவேர் 1981 இல் இவரது நினைவாக பெயரிடப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் , அபுள் விண்வெளித் தொலைநோக்கியின் பரந்த புலக் கோள் ஒளிப்படக் கருவிவழி அவர் செய்த பணிக்காக இலவுவேருக்கு நாசா விதிவிலக்கான அறிவியல் சாதனை பதக்கம் வழங்கப்பட்டது.[5] வானியல் ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களின் கழகத்தால் 1993 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் சிறந்த அறிவியலுக்கான அவுரா( AURA) சிறந்த சாதனையாளர் விருது இரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[6][7] நியூ ஒரைசன்சு அணியின் உறுப்பினராக , இவர் 2017 நாசா குழு சாதனையாளர் விருதைப் பகிர்ந்து கொண்டார்.[8] நிகழ்வு ஒரைசன்சு தொலைநோக்கி ஒத்துழைப்பின் உறுப்பினராக , இவர் அடிப்படை இயற்பியலில் 2020 திருப்புமுனை பரிசைப் பகிர்ந்து கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lauer, T. R. (2007). "The Masses of Nuclear Black Holes in Luminous Elliptical Galaxies and Implications for the Space Density of the Most Massive Black Holes". Astrophysical Journal 662: 808–834. doi:10.1086/518223. Bibcode: 2007ApJ...662..808L.
- ↑ Lauer, T. R. (1999). "Combining Undersampled Dithered Images". Publications of the Astronomical Society of the Pacific 111 (756): 227–237. doi:10.1086/316319. Bibcode: 1999PASP..111..227L.
- ↑ Benford, D. J.; Lauer, T. R. (2006). Mather, John C; MacEwen, Howard A; De Graauw, Mattheus W. M. eds. "Destiny: a candidate architecture for the Joint Dark Energy Mission". Proceedings of the SPIE. Space Telescopes and Instrumentation I: Optical, Infrared, and Millimeter 6265: 626528. doi:10.1117/12.672135. Bibcode: 2006SPIE.6265E..28B.
- ↑ "IMDB Entry for Naked Science episode #78, 'Hubble's Amazing Universe'". IMDb.
- ↑ "NASA Funds Development of Destiny: The Dark Energy Space Telescope". National Optical Astronomy Observatory. August 3, 2006 – via SpaceRef Interactive.
- ↑ "AURA Award Winners 1990-2012". Association of Universities for Research in Astronomy.
- ↑ "2016 AURA Awards" (PDF). Association of Universities for Research in Astronomy. 2016.
- ↑ "New Horizons Team Earns NASA, International Awards". New Horizons. February 7, 2017 – via The Johns Hopkins University Applied Physics Laboratory.