உள்ளடக்கத்துக்குச் செல்

துக்ளக் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ghiyath-ud-din Tughluq Shah II
துக்ளக் கானின் உலோக நாணயம்
20வது தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்20 செப்டம்பர் 1388 – 14 மார்ச் 1389
முடிசூட்டுதல்21 செப்டம்பர் 1388
முன்னையவர்பிரூசு சா துக்ளக்
பின்னையவர்அபுபக்கர் சா
பிறப்புதெரியவில்லை
இறப்பு14 மார்ச் 1389
தில்லி, தில்லி சுல்தானகம், நவீன இந்தியா
அரசமரபுதுக்ளக் வம்சம்
தந்தைபதே கான்
மதம்சுன்னி இசுலாம்

இரண்டாம் கியாத்-உத்-தின் துக்ளக் சா (Ghiyath-ud-din Tughluq Shah II) துக்ளக் கான் என்ற பெயரில் பிறந்த இவர் பதே கானின் மகனும் மற்றும் பிரூசு சா துளக்கின் பேரனுமாவார். தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் சுல்தானான இவர் கி.பி.1388 இல் அரியணை ஏறினார்.[1] இருப்பினும், மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா தனது சகோதரர் ஜாபர் கானின் மகன் அபு பக்கர் கானின் ஆதரவுடன் தில்லியின் மீது உரிமை கோரினார். துக்ளக் கான் தனது மாமாவுக்கு எதிராக சிர்மூர் மலையின் அடிவாரத்தில் படைகளைச் சந்தித்தார். ஒரு சிறிய போருக்குப் பிறகு நசீருதீன் முகமது சா காங்க்ரா கோட்டையில் தஞ்சம் அடைந்தார். துக்ளக் கானின் இராணுவம் நிலப்பரப்பின் சிரமங்களால் அவரை மேலும் பின்தொடராமல் தில்லிக்குத் திரும்பியது. இறுதியில், சில அமீர்கள் ஜாபர் கானின் மகன் அபுபக்கர் கானுடனும் சுல்தான் பிரூசு சா துக்ளக்கின் பேரனுடனும் சேர்ந்து துக்ளக் கானைக் கொல்லத் திட்டமிட்டனர். 1389 ஆம் ஆண்டில் அவர்கள் சுல்தானையும் அவரது பிரதம அமைச்சர் ஜஹான் கானையும் சுற்றி வளைத்து, அவர்களைக் கொன்றுவிட்டு, தில்லி நகரின் நுழைவாயிலில் தலையைத் தொங்கவிட்டனர். துக்ளக் கானின் ஆட்சிக் காலம் ஐந்து மாதங்கள் பதினெட்டு நாட்கள் மட்டுமே இருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sen, Sailendra (2013). A Textbook of Mediavel Indian History. Primus Books. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்ளக்_கான்&oldid=3834377" இலிருந்து மீள்விக்கப்பட்டது