உள்ளடக்கத்துக்குச் செல்

திபேத்திய ஆக்கங்களுக்கான நூலகமும் சுவடிக்கூடமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபேத்திய ஆக்கங்களுக்கான நூலகமும் சுவடிக்கூடமும், தர்மசாலா

திபேத்திய ஆக்கங்களுக்கான நூலகமும் சுவடிக்கூடமும் இந்தியாவின் தர்மசாலா என்னும் இடத்திலுள்ள ஒரு திபேத்திய நூலகம் ஆகும். 14 ஆவது தலாய் லாமாவான தென்சின் கியாட்சோவால் 1970 ஆம் ஆண்டு யூன் மாதம் 11 ஆம் நாள் நிறுவப்பட்ட இந்த நூலகம் உலகில் உள்ள திபேத்திய ஆக்கங்களுக்கான நூலகங்களில் முக்கியமான ஒன்றாகும்.

1959 ஆம் ஆண்டு தப்பிவந்தபோது கொண்டு வரப்பட்ட, திபேத்தின் வரலாறு அரசியல், பண்பாடு, கலை என்பன தொடர்பான சுவடிகளும், பௌத்த நூல்களும் இந்த நூலகத்தில் உள்ளன. சுமார் 80,000 கையெழுத்துப் பிரதிகள், நூல்கள் சுவடிகள் ஆவணங்கள் என்பனவும், 600 சிலைகள், தாங்காக்கள் எனப்படும் பௌத்தம் சார்ந்த பதாகைகள், பிற பௌத்தப் பண்பாட்டுக்குரிய பொருட்கள் போன்றனவும், 6,000 க்கு மேற்பட்ட நிழற்படங்களும் அங்கே உள்ளன.

இந்த நிறுவனத்தின் முக்கியமான நோக்கம் உயர்தரமான பண்பாட்டு வளங்களை வழங்குவதும், ஆய்வுகளுக்குரிய சூழலை ஏற்படுத்துவதுடன், அறிவைப் பரிமாறிக் கொள்வதுமாகும். இந் நூலகத்தின் மூன்றாம் தளத்தில் ஒரு அருங்காட்சியகம் உண்டு. இது 1974 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இங்கே பழமை வாய்ந்த பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]