திட்டப்பிழை
திட்டப்பிழை (Standard error) என்பது புள்ளியியல் அளவையின் மாதிரிப் பரவலின் விலக்கம் ஆகும்.[1]
திட்டப்பிழை
[தொகு]ஒரு புள்ளியியல் அளவையின் மாதிரிப் பரவலின் திட்டவிலக்கமே திட்டப்பிழை எனப்படும்.[2] இதனை ஆங்கிலத்தில் S.E. எனக் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக சராசரி x̄ ன் மாதிரிப் பரவலின் திட்டவிலக்கம் [1] அச்சராசரியின் திட்டப்பிழை ஆகும்.
எனவே சராசரியின் திட்டப்பிழை =
- .
பெருங்கூறுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நன்கு அறிந்த புள்ளியியல் அளவைகளின் திட்டப்பிழைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் n என்பது மாதிரியின் அளவு , σ2 என்பது முழுமைத் தொகுதியின் மாறுபாடு மற்றும் P என்பது முழுமைத் தொகுதியின் விகிதசமம் ஆகும். மேலும் Q = 1- P. n1 மற்றும் n2 என்பன இரு மாதிரிகளின் அளவுகளாகும்.
வ.எண் | புள்ளியியல் அளவை | திட்டப்பிழை |
---|---|---|
1 | மாதிரியின் சராசரி | σ/√n |
2 | கண்டறியப்பட்ட மாதிரி விகிதசமம் | √PQ/n |
3 | இரு மாதிரிகளின் சராசரிகளின் வித்தியாசம் | √(σ12/n1 + σ22/n2) |
4 | இரு மாதிரிகளின் விகித சமங்களின் வித்தியாசம் | √(P1Q1/n1 + P2Q2/n2) |
திட்டப்பிழைகளின் பயன்பாடுகள்
[தொகு]திட்டப்பிழையானது பெருங்கூறு கோட்பாடுகளிலும் எடுகோள் சோதனைகளுக்கு அடிப்படையாகவும் பயன்படுகிறது. பண்பளவையின் மதிப்பீட்டின் நுண்மையின் அளவீடாக செயல்படுகிறது. திட்டப்பிழையின் தலைகீழியை மாதிரியின் நுண்மை அல்லது நம்பகத்தன்மையின் அளவாகக் கொள்ளலாம்.திட்டப்பிழையானது முழுமைத் தொகுதியின் பண்பளவை அமைவதற்கான நிகழ்தகவு எல்லைகளைக் கண்டுபிடிக்க ஏதுவாக அமைகிறது.
குறிப்பு
[தொகு]ஒரு மாதிரியின் அளவை அதிகரித்து புள்ளியியல் அளவையின் திட்டபிழையைக் குறைக்கலாம். ஆனால் இம்முறையில் செலவு, உழைப்பு மற்றும் நேரம் ஆகியவை அதிகரிக்கின்றன
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "cbse books". பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017.
- ↑ Altman, Douglas G; Bland, J Martin (2005-10-15). "Standard deviations and standard errors". BMJ : British Medical Journal 331 (7521): 903. doi:10.1136/bmj.331.7521.903. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-8138. பப்மெட்:16223828.