உள்ளடக்கத்துக்குச் செல்

தாம்ரலிப்தா ஜாதியா அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்ரலிப்தா ஜாதியா அரசு
Tamralipta Jatiya Sarkar
তাম্রলিপ্ত জাতীয় সরকার
சுதந்திரமான இணை அரசாங்கம்
உருவாக்கம்திசம்பர் 17, 1942 (1942-12-17)
அழிவு8 ஆகத்து 1944 (1944-08-08)
பிரதேசம்தம்லக், வங்காள மாகாணம்
செயல்
சர்பாதிநாயக்சதீசு சந்த்ர சமந்தா

தாம்ரலிப்தா ஜாதியா அரசு (Tamralipta Jatiya Sarkar) அல்லது தம்லக் தேசிய அரசாங்கம் என்பது தற்போதைய இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் தம்லக் மற்றும் கோண்டாய் உட்பிரிவுகளில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது (1942-1944) நிறுவப்பட்ட ஒரு சுதந்திரமான இணை அரசாங்கமாகும். பிரித்தானிய இந்தியாவில் ‘பிரிதானிய அரசே, இந்தியாவை விட்டு வெளியேறு!’ என்ற முழக்கங்களுக்கு மத்தியில் நிறுவப்பட்ட முதல் மக்கள் அரசாங்கமாகும், மேலும் பிரித்தானிய ஆட்சியின் போது இரண்டு ஆண்டுகள் சுதந்திரமாக இயங்கிய ஒரே இணையான அரசாங்கம் என்ற பெருமையும் இதற்குண்டு.[1]

வரலாறு

[தொகு]

இது சதீசு சந்த்ர சமந்தா என்பவரால் உருவாக்கப்பட்டது. சமந்தா, சூன் 1943 இல் கைது செய்யப்படும் வரை அதன் செயல்பாட்டைக் கவனித்து வந்தார். இது செப்டம்பர் 1944 வரை நீடித்தது. இது சூறாவளி நிவாரணப் பணிகளை மேற்கொண்டது, பள்ளிகளுக்கு மானியங்களை வழங்கியது. மற்றும் ஆயுதமேந்திய வித்யுத் வாகினியை ஒருங்கிணைத்தது.[2] மேலும் இந்த அமைப்பில் சுசில் குமார் தாரா, அஜய் முகர்ஜி மற்றும் மாதங்கினி அஸ்ரா போன்றவர்கள் அமைச்சர்களாக உதவினர். இணை அரசாங்கம் காவல் நிலையங்கள், இராணுவத் துறைகள், நீதிமன்றங்கள் மற்றும் வருவாய் சேகரிப்பு அமைப்புகளை அமைத்து, நீதி வழங்குவதன் மூலமும், அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதன் மூலமும், ஏழைகள் மற்றும் துன்பப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலமும் ஆங்கிலேயர்களின் குடிமை அரசாங்கத்தை முற்றிலுமாக அகற்றியது.[3] [4] இறுதியில் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மகாத்மா காந்தியின் தலையீட்டால் இது அகற்றப்பட்டது

ஆங்கிலேயர்களுக்கு இணையான தேசிய அரசாங்கத்தை நிறுவிய சதீஷ் சந்திர சமந்தா

பின்னணி

[தொகு]

மிட்னாபூர் கிளர்ச்சியாளர்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் காந்திய அகிம்சை நடைமுறையில் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. காந்தியின் அகிம்சை கோட்பாடு கிளர்ச்சியாளர்களை அவரது ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோட்பாட்டைப் போல செயல்படவில்லை. ஒரு மறைமுகமான இலக்கியம் (தம்ரலிப்தா ஜாதிய அரசின் அதிகாரப்பூர்வ இதழான 'பிப்லபி' உட்பட) அந்தக் கட்டளையை குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்தது. சுபாஷ் சந்திர போஸின் இந்தியத் தேசிய இராணுவம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வங்காளத்தின் மீது படையெடுப்பதில் வெற்றி பெற்றால், அதற்கு உதவும் நம்பிக்கையில் சுஷில் குமார் தாராவின் தலைமையில் 'வித்யுத் வாகினி' என்ற ஆயுதமேந்திய போராளிகளை சதீசு சந்த்ர சமந்தா தொடங்கினார் (ஆனால் அது நடக்கவில்லை).[5][6][7][8][9]

நினைவு

[தொகு]
இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் மாதங்கினி அஸ்ரா
இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் அஜய் முகர்ஜி

2002 ஆம் ஆண்டில், இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தாம்ரலிப்தா ஜாதியா சர்க்கார் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. மூன்று முறை மேற்கு வங்காளத்தின் முதலமைச்சரான அஜய் முகர்ஜி மற்றும் அணிவகுப்பின் போது தனது உயிரை தியாகம் செய்த மாதங்கினி அஸ்ரா ஆகியோரை இந்த அஞ்சல் தலை சித்தரிக்கிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "When India's First People's Government was Formed in West Bengal's East Midnapore During British Rule". News18 (in ஆங்கிலம்). 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
  2. Chandra, Bipan and others (1998). India's Struggle for Independence, New Delhi:Penguin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-010781-9, p.466
  3. "Tamralipta Jatiya Sarkar".
  4. 4.0 4.1 "PIB Press Releases". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
  5. Taneja, Anup (2005). Gandhi, Women, and the National Movement, 1920-47 (in ஆங்கிலம்). Har-Anand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124110768.
  6. Sarkar, Sumit (1989-01-24). Modern India 1885–1947 (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781349197125.
  7. Ray, Nisith Ranjan; Committee, Chittagong Uprising Golden Jubilee (1984). Challenge, a saga of India's struggle for freedom (in ஆங்கிலம்). People's Publishing House.
  8. "The forgotten part of Quit India Movement". OdishaPlus (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
  9. Daniyal, Shoaib. "From Tamluk to Nandigram: How the Quit India movement brought down the Left Front in West Bengal". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்ரலிப்தா_ஜாதியா_அரசு&oldid=4008088" இலிருந்து மீள்விக்கப்பட்டது