தனக்ரா
தனக்ரா Τανάγρα | |
---|---|
அமைவிடம் | |
Location within the region | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | நடு கிரேக்கம் |
மண்டல அலகு: | போயோட்டியா |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | 19,432 |
- பரப்பளவு: | 461.02 km2 (178 sq mi) |
- அடர்த்தி: | 42 /km2 (109 /sq mi) |
நிர்வாக அலகு | |
- மக்கள்தொகை: | 3,827 |
- பரப்பளவு: | 122.53 km2 (47 sq mi) |
- அடர்த்தி: | 31 /km2 (81 /sq mi) |
சமூகம் | |
- மக்கள்தொகை: | 1,117 |
- பரப்பளவு: | 27.814 km2 (11 sq mi) |
- அடர்த்தி: | 40 /km2 (104 /sq mi) |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (மத்தியில்): | 214 m (702 ft) |
அஞ்சல் குறியீடு: | 322 00, 320 09 |
தொலைபேசி: | 22620 |
வாகன உரிமப் பட்டை: | ΒΙ |
தனக்ரா (Tanagra, கிரேக்கம்: Τανάγρα ) என்பது கிரேக்கத்தின் போயோட்டியாவில், ஏதென்சுக்கு வடக்கே உள்ள ஒரு நகர பகுதி ஆகும். இந்த நகராட்சியின் தலைமையகம் ஷிமாடாரியில் அமைந்துள்ளது.[2] இது தீப்ஸிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. மேலும் இப்பகுதியின் பெயரிலான சிலைகளாளான தனக்ரா சிலைகள் எனப்படும் கிரேக்க சுடுமண் சிலைகள் அச்சு-வார்ப்பு மற்றும் சுடுமண்ணாலான சிலைவகைகளுக்கு இப்பகுதி பழங்காலத்தில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்த கிரேக்க டெரகோட்டா சிலைகள் கிமு நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, முதன்மையாக தனக்ராவில் தயாரிக்கப்பட்டன.
அரசாங்கம்
[தொகு]2011 ஆம் ஆண்டு உள்ளூர் அரசாங்க சீர்திருத்தத்தின் போது தனக்ரா நகராட்சியானது பின்வரும் 4 நகராட்சிகளை இணைத்து அதன் மூலம் விரிவுபடுத்தி உருவாக்கப்பட்டது. அவை நகராட்சி அலகுகளாக மாறின:[2]
- டெர்வெனோகோரியா
- ஒய்னோஃபைட்டா
- ஷிமாதாரி
- தனக்ரா
வரலாறு
[தொகு]பண்டைய காலத்தில், தனக்ரா ( பண்டைக் கிரேக்கம்: Τάναγρα ), சில சமயங்களில் தனாக்ரேயா (Tanagraea) என்று எழுதப்பட்டது, பழங்கால போயோட்டியாவின் ஒரு நகரமாக இருந்தது. இது அசோபஸ் ஆற்றின் இடது கரையில், ஒரு வளமான சமவெளியில், ஓரோபஸிலிருந்து 130 ஸ்டேடியா தொலைவிலும், பிளாட்டியாவிலிருந்து 200 ஸ்டேடியா தொலைவிலும் அமைந்துள்ளது.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
- ↑ 2.0 2.1 "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette.
- ↑ Dicaearch.