தட்பவெப்பச் சிகிச்சை
Appearance
தட்பவெப்பச் சிகிச்சை | |
---|---|
MeSH | D013790 |
தட்பவெப்பச் சிகிச்சை (Climatotherapy) என்பது ஒரு நோயாளியை அவர் குணமடைவதற்கு ஏற்புடைய தட்பவெப்ப நிலையுள்ள இடத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் நோய்க்குச் சிகிச்சையளிக்கும் முறையாகும். இம்மாற்றம் தற்காலிகமானதாகவோ அல்லது நிலையான மாற்றமாகவோ இருக்கலாம்.
எடுத்துக்காட்டுகள்:
- ஆக்சிசனின் பகுதி அழுத்தம் அதிக உயரத்தில் குறைவாக உள்ளது. எனவே அரிவாள் வடிவ இரத்தச் சிவப்பணு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அரிவாள் செல்களின் நெருக்கடி எண்ணிக்கையைக் குறைக்க அதிக அழுத்தம் நிலவும் உயரத்திற்கு கொண்டு செல்லப்படுவர்.[1]
- தடிப்புத் தோல் அழற்சி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக குறிப்பாக சாக்கடல் பிராந்தியத்திற்கு மாற்றப்படலாம். உலகெங்கிலும் உள்ள பல தளங்கள் இதற்காக விளம்பரப்படுத்தப்படுகின்றன அல்லது ஆய்வு செய்யப்படுகின்றன.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sickle Cell Disease-What Increases Your Risk".
- ↑ Climatotherapy sites பரணிடப்பட்டது 2005-06-12 at Archive.today National Psoriasis Foundation
- ↑ Hodak, Emmilia; Alice B. Gottlieb; Tsvi Segal; Yael Politi; Lea Maron; Jaqueline Sulkes; Michael David (2003). "Climatotherapy at the Dead Sea is a remittive therapy for psoriasis: combined effects on epidermal and immunologic activation". Journal of the American Academy of Dermatology 49 (3): 451–7. doi:10.1067/S0190-9622(03)00916-2. பப்மெட்:12963909.