ஜெயந்த் பதக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயந்த் பதக்
தொழில்கவிஞர், இலக்கிய விமர்சகர்
தேசியம்இந்தியன்
கல்விமுதுகலைப்பட்டம், முனைவர் பட்டம்
கல்வி நிலையம்எம்.டி.பி கலைக்கல்லூரி, சூரத்
காலம்நவீன குஜராத்தி இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • வனாஞ்சல் (1967)
  • அமுனயா (1978)
  • ம்ருகயா (1983)
குறிப்பிடத்தக்க விருதுகள்
கையொப்பம்

ஜெயந்த் ஹிம்மத்லால் பதக் ( குசராத்தி: જયંત હિંમતલાલ પાઠક  ; 20 அக்டோபர் 1920   - 1 செப்டம்பர் 2003) ஒரு குஜராத்தி கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.1990 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை குஜராத்தி சாகித்ய பரிஷத்தின் தலைவராக இருந்தார். இவர் சாகித்ய அகாடமி விருது, குமார் சுவர்ண சந்திரக், நர்மத் சுவர்ண சந்திரக், ரஞ்சித்ரம் சுவர்ண சந்திரக் மற்றும் உமா-சினேராஷ்மி பரிசு உட்பட பல விருதுகளைப் பெற்றார். ஜெயந்த் பதக் கவிதை விருது அவரின் பெயரால் வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

1920 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி கவுடா பிராமண குடும்பத்தில் பதக் பிறந்தார், தற்போதைய இந்தியாவின் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தின் ராஜ்கத் தாலுகாவில் உள்ள கோத் என்ற கிராமத்தில் இச்சாபா மற்றும் ஹிம்மாத்ரம் ஜோய்தாராம் பதக் ஆகியோருக்கு பிறந்தார். "பச்சுடோ" என்பது அவரது குழந்தைப் பருவ புனைபெயர் ஆகும். இவரின் தந்தை ஹிம்மாத்ரம் பதக்கிற்கு பத்து வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார். எனவே, பதக்கை அவரது தாத்தா ஜொய்தாராம் வளர்த்தார். அவர் தனது மழலையர் கல்வியை ராஜ்காட்டில் முடித்தார். பின்னர், 1930 ஆம் ஆண்டில் அவர் கலோலில் உள்ள மோட்டாபாஹெனின் வீட்டிற்குச் சென்றார். அங்கு கலோலில் என்.ஜி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து தனது பதின்மக் கல்வியை நிறைவு 1938 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார். 1943 ஆம் ஆண்டில் எம்டிபி கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், 1945 ஆம் ஆண்டில் வதோதரா கல்லூரியில் குஜராத்தி மற்றும் சமஸ்கிருத பாடங்களில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். அவர் 1960 ஆம் ஆண்டில், விஷ்ணுபிரசாத் திரிவேதியின் கீழ், தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அவரது முனைவர் பட்டத்தின் தலைப்பானது 1920 பச்சினி குஜராத்தி கவிதானி சமஸ்கிருதிக் பூமிகா: பரிபலோ அனே சித்தி ஆகும். அவர் பானுபஹேனை மணந்தார்.

தொழில்[தொகு]

1943 முதல் 1945 வரை, வதோதராவில் உள்ள புதிய சகாப்த பள்ளி, கட்டாபிட்டி பள்ளி, மற்றும் கர்ஜன் கிராமத்தில் உள்ள பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார். 1948 முதல் 1953 வரை மும்பை, புனே, டெல்லி ஆகிய நாடுகளில் வாழ்ந்த அவர் பத்திரிகை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றினார். 1953 இல் சூரத்தில் உள்ள எம்டிபி கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், அங்கிருந்து 1980 ல் ஓய்வு பெற்றார். 1989 முதல் 1991 வரை குஜராத்தி சாகித்ய பரிஷத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1992 இல் நர்மத் சாகித்யா சபையின் தலைவராகவும், 1992 ல் காவி நர்மத் யுகவர்தா அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றினார். இவரது இலக்கியப் படைப்புகள் குஜராத்மித்ரா, லோக்சட்டா, குமார், புத்தப்பிரகாஷ், கிரந்த், விஸ்வ மனவ், கவிதா மற்றும் கவிலோக் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டன .

அவர் செப்டம்பர் 1, 2003 அன்று சூரத்தின் நான்புராவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

படைப்புகள்[தொகு]

குஜராத்தின் பழங்குடி வனப் பகுதியான பஞ்சமஹால் என்ற அவரது பிறந்த இடத்தின் சூழ்நிலை அவரது கவிதைகளை கடுமையாக பாதித்திருந்தது. அவர் பல்வேறு இலக்கிய ஆளுமைகளையும் அறிந்திருந்தார், மேலும் அவர் இளம் வயதிலேயே அவர்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார். இதில் பின்னாளில் புகழ் பெற்ற குஜராத்தி கவிஞரான அவரது முதல் மைத்துனர் உஷ்னாஸ், மற்றும் அவரது பள்ளி ஆசிரியர் பிரன்ஷங்கர் பட் ஆகியோர் அடங்குவர். குஜராத்தி கவிஞர்களான உமாஷங்கர் ஜோஷி மற்றும் சுந்தரம் ஆகியோர்களாலும் அவர் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தார்.[1]

மார்மர் என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு ஆகும். இந்தக் கவிதைத் தொகுப்பு 1954ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beyond The Beaten Track". Gujaratilexicon.com (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2017-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்த்_பதக்&oldid=3448441" இலிருந்து மீள்விக்கப்பட்டது