உமாசங்கர் ஜோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாசங்கர் ஜெதலால் ஜோசி (ஆங்கிலம்: Umashankar Jethalal Joshi ) (பிறப்பு:1911 சூலை 21 - இறப்பு 1988 திசம்பர் 19) இவர் குஜராத்தி இலக்கியத்தின் மூலம் அறியப்பட்ட ஒரு இந்திய கவிஞரும், அறிஞரும் மற்றும் எழுத்தாளருமாவார். [1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

பாம்னா (இப்போது குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள பிலோடா தாலுகா) என்ற சிறிய கிராமத்தில் ஜெதலால் கமல்ஜி மற்றும் நவல் பாய் தம்பதியருக்கு உமாசங்கர் ஜோசி பிறந்தார். அவருக்கு ஆறு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உட்பட எட்டு உடன்பிறப்புகள் இருந்தனர். [2]

உமாசங்கர் ஜோசியின் தந்தை ஜெதலால் பல சாகிர்களிடம் கர்பாரியாக(தலைமை நிர்வாகி) பணிபுரிந்தவர். தனது மகன்களுக்கு ஆங்கிலக் கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். 1916 ஆம் ஆண்டில், ஜோசி தனது கல்வியை பாம்னாவில் உள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கினார். ஆசிரியர் இல்லாததால் 4 ஆம் வகுப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்தார். இதைக் கண்ட ஜெதலால், ஜோசியை இடாரில் உள்ள சர் பிரதாப் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். குழந்தையாக இருந்தபோது, அவர் ஆரவல்லி மலைப் பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டார். பாம்னாவிலும் அதைச் சுற்றியுள்ள வண்ணமயமான பருவமழைக் கண்காட்சிகளையும் கண்டார். இந்த கிராம வாழ்க்கை அவரது மொழியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி அவரிடம் "கவிதை வரிகளை" உருவாக்கியது.

இடாரில் உள்ள சர் பிரதாப் உயர்நிலைப் பள்ளியில், ஜோசி 1927 வரை 6 ஆண்டுகள் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1927 இல் உயர் கல்விக்காக அகமதாபாத்தில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். [3] உயர் கல்வியைத் தொடர அகமதாபாத்திற்கு சென்றது அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனை என்று ஜோசி கருதினார். அகமதாபாத் அப்போது பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது, இடார் மற்றும் பாம்னா ஆகியவை இடார் மாநிலத்தின் சுதேச ஆட்சியின் கீழ் இருந்தன. அகமதாபாத் ஜோசியை குஜராத்தி இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியது. இந்த நகரம் அவரது சமூக மற்றும் அரசியல் உணர்வை மேம்படுத்த உதவியது. 1928 இல், ஜோசி அகமதாபாத்தில் உள்ள குஜராத் கல்லூரியில் சேர்ந்தார். 1930 இல் தேசிய இயக்க செல்வாக்கின் கீழ் பிரித்தானிய கல்வியை விட்டு தனது படிப்பைத் தொடர்ந்தார். [2] [4]

ஜோசி தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த கிராமச் சூழல் அவரது கல்லூரி நாட்களில் அவரது கவிதைக்கு உத்வேகம் அளித்தது. [5] [4] ஜோஷிக்கு 17 வயதாக இருந்தபோது உயர்கல்வி முடித்து குஜராத் கல்லூரியில் சேர்ந்தபோது அவரது கவிதை வெளியிடல் ஆரம்பமானது. ஜோஷியும் மற்ற இரண்டு நண்பர்களும் ஆரவல்லி மலையின் மிக உயரமான சிகரமான அபு மலையில் ஏறினர். அங்கு நாக்கி ஏரியின் மீது சந்திரன் பிம்பம் எழுவதைக் கண்டார். மலை உச்சியில் ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்குப் பிறகு, இலையுதிர்கால வீழ்ச்சி, நிலவும் ஏரியும் ஜோசிக்கு தனது முதல் கவிதை எழுத ஊக்கமளித்தன. குஜராத் கல்லூரி இதழில் வெளியிடப்பட்ட நக்கீ சரோவரே சரத் பூர்ணிமா (Tr: நக்கி ஏரியில் இலையுதிர் கால பெளர்ணமி ) என்ற கவிதை, ஒரு சரணத்தில் கவிதை எழுதுவதை விவரிக்கிறது:

சுதந்திர ஆர்வலரும் இளம் கவிஞரும்[தொகு]

ஜனவரி 1929 இல், ஜோசி குஜராத் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ஒரு வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார். இது இந்தியாவில் நடந்து வரும் தேசிய இயக்கத்துடன் அவரது முதல் பங்களிப்பாக குறிப்பிடப்பட்டது. [3] 26 டிசம்பர் 1929 அன்று லாகூர் கூட்டத்தில், முழு தன்னாட்சி சாற்றல் அவர்களின் பணி என்று காங்கிரஸ் அறிவித்தது. காந்தி மற்றும் முழு தன்னாட்சி சாற்றல் (சுயராஜ்ஜியம்) அறிவிப்பு ஜோசியை சத்தியாக்கிரகியாக மாற்ற தூண்டியது. ஏப்ரல் 1930 இல், ஜோசி விராம்கம் சத்தியாக்கிரக முகாமில் சத்தியாக்கிரகியாக சேர்ந்தார். பிரித்தானிய அதிகாரிகள் அவரை நவம்பர் 1930 இல் மற்ற சத்தியாக்கிரகிகளுடன் கைது செய்தனர். ஆரம்பத்தில் சபர்மதி சிறையிலும், பின்னர் யெர்வாடா கூடார சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த ஆரம்ப சிறைவாசம் 14 வாரங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக, ஜோசி 1931 இன் ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுடன் விடுவிக்கப்பட்டார். மார்ச் 1931 இல் நடைபெற்ற கராச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். ஜோசி ஜூலை முதல் குஜராத் வித்யாபிடத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆறு மாதங்கள் கலந்து கொண்டார். 1932 ஆம் ஆண்டில், ஜோசி மீண்டும் சபர்மதி மற்றும் விசாபூர் சிறைகளில் எட்டு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். [2] [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. 13 October 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 டிசம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. 2.0 2.1 2.2 "Umashankar Joshi ~ Indian writer writing in Gujarati Language". 2014-06-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-16 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "umashankarjoshi.in" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "umashankarjoshi.in" defined multiple times with different content
  3. 3.0 3.1 "Umashankar Joshi: Chronology". 2014-06-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-16 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Chronology" defined multiple times with different content
  4. 4.0 4.1 4.2 Bholabhai Patel (9 September 2016). "પોતાની કવિતાના નાયક તરીકે ગાંધીજીને રાખી 'વિશ્વશાંતિ'ની રચના કરનારા ૨૦ વર્ષના તરુણ કવિ ઉમાશંકરની મુગ્ધ નજરમાં વિશ્વશાંતિનો જે આદર્શ પ્રગટ્યો, તે પછી દ્રઢ થતો રહે છે". Divya Bhaskar (குஜராத்தி). 19 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Umashankar Joshi ~ Indian writer writing in Gujarati Language". 2016-06-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாசங்கர்_ஜோசி&oldid=3545110" இருந்து மீள்விக்கப்பட்டது