ஜெகத் காஸ்பர் ராஜ்
பிறப்பு | 22 சனவரி 1966 காஞ்சாம்புறம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு |
---|---|
வதிவு | சென்னை |
குடியுரிமை | இந்தியன் |
தேசியம் | இந்தியா |
இனம் | தமிழர் |
அறியப்பட்டது | தமிழ் மைய்யம், சென்னை சங்கமம், தமிழர் தொழில் வர்த்தக விவசாயப் பெருமன்றம் -CTACIS |
மதம் | கிறிஸ்தவம் |
ஜெகத் காஸ்பர் ராஜ் (Rev.Fr.Jegath Gaspar Raj) என்பவா் சென்னையை சார்ந்த கத்தோலிக்க பாதிரியார். தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரும், சென்னை சங்கமம் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். 1995-2001 இல் வானொலி வெரிட்டசின் தமிழ் சேவையின் இயக்குனராக பணியாற்றினார். அவர் ஐடியா-ஜெய்பிரைட்டி சென்னை சர்வதேச மராத்தான் அமைப்பாளராகவும் இருக்கிறார். இவர் நாளா் பிரசுரங்களின் நிறுவனராகவும், ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். 2009 ல், ஈழப் போர் IV இன் இறுதி கட்டங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு தூதராக செயல்பட்டார்..[1][2][3]
இவர் தமிழை தாய் மொழியாக கொண்ட வணிக நபர்களுக்கு ஒரு தமிழ் நிறுவனத்தையும் நிறுவினார். இது தமிழர் தொழில் வர்த்தக விவசாயப் பெருமன்றம் என்று அழைக்கப்படுகிறது. [4] அனைத்து உறுப்பினர்களும் ஒரு வாரம் ஒரு முறை சந்திக்கிறார்கள், அவர்களது சொந்த வணிகங்களை விவாதிக்கவும் மேம்படுத்தவும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Marathon fever on". தி இந்து. 3 January 2009 இம் மூலத்தில் இருந்து 2010-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100103025050/http://www.hinduonnet.com/2009/09/10/stories/2009091059250200.htm. பார்த்த நாள்: 2010-01-28.
- ↑ "Engineering colleges should have Tamil scholars". தி இந்து. 10 September 2009 இம் மூலத்தில் இருந்து 2009-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090610005936/http://hindu.com/2009/01/03/stories/2009010355020500.htm. பார்த்த நாள்: 2010-01-28.
- ↑ Manikandan, K. (27 June 2005). "Eagerly awaiting Ilayaraja's `Thiruvasagam'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2005-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050728123929/http://www.hindu.com/2005/06/27/stories/2005062712380400.htm. பார்த்த நாள்: 2010-01-28.
- ↑ "மதுரையில் தமிழ் முனைவோர் மாநாடு". simplicity.in. 20 திசம்பர் 2018. https://simplicity.in/coimbatore/english/news/39211/---------.