ஜன் பகாத் தர்கா
ஜன் பகாத் சைதுலு தர்கா (Jan Pahad Saidulu Dargah) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள பால்கவீடு மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தர்கா ஆகும்.[1] ஆண்டுதோறும் நடைபெறும் உர்ஸ் திருவிழாவின் போது பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் புனிதக் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.[2]
துறவி மொகினுதீன் என்ற ஷகீத் மற்றும் ஜான் பகாத் சைதுலு ஆகியோரின் கல்லறையின் மீது தர்கா கட்டப்பட்டுள்ளது. கவ்வாலி, சண்டல் ஷரீப் சடங்கு ஊர்வலம் மற்றும் பிற சிறப்பு சடங்குகள் உர்ஸ் பண்டிகைகளைக் குறிக்கின்றன.
பாதை: நெரேடுச்சார்லா மண்டல் தலைமையகத்திலிருந்து 20 கி.மீ தூரம். மேலும் மிரியாலகுடாவிலிருந்து தாமரச்சேர்லா வழியாக மற்றொரு பாதை (தாமரச்சேர்லா அட்டாங்கி - நர்கெட்பல்லி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது) . ஜனபஹத் தர்கா தாமரச்சேர்லாவிலிருந்து 9 கிமீ தொலைவில். நெரேட்சர்லா மற்றும் தாமர்சர்லாவிலிருந்து தானிக்கள் மற்றும் பேருந்துகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Devotees throng dargah". தி இந்து. 2009-01-24 இம் மூலத்தில் இருந்து 2011-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110919165215/http://www.hindu.com/2009/01/24/stories/2009012450770200.htm.
- ↑ "Candidates seek divine intervention". தி இந்து. 2009-03-25 இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107085247/http://www.hindu.com/2009/03/25/stories/2009032551190200.htm.