உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் கால சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழர் காலத்தில் சாலைகள் 3 வகைப்பட்டன. அவை,

  1. பெருந்தெருக்கள்
  2. வதிகள்
  3. பெருவழிகள்

பெருந்தெருக்கள்

[தொகு]

சோழர் காலத்தில் நகரத்து நெடிய வீதிகள் பெருந்தெருக்கள் என்று அழைக்கப்பட்டன.[1]

வதிகள்

[தொகு]

சிற்றூர்களை இணைக்கும் சிறுவழிகள் வதிகள் என்று அழைக்கப்பட்டன.[2]

பெருவழிகள்

[தொகு]

நகரங்களை இணைக்கும் சாலைகள் பெருவழிகள் எனப்பட்டன.[3] அதில் தஞ்சை நகர பெருவழிகள் நான்கு அவை,

  1. வடுக வழி (வடக்கில் உள்ள வடுக நாடுகளுக்கு சென்றவை)
  2. தடிகை வழி (தடிகைப்பாடிக்கு சென்றது)
  3. மேலைப் பெருவழி (மேற்கு நோக்கிச் சென்றது)
  4. கொங்கு வழி (கொங்கு நாட்டை நோக்கிச் சென்றது)

மேலுள்ள 4 சாலைகள் சோழப் பேரரசின் தேசிய நெடுஞ்சாலைகளாக இருந்தன.[4]

குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூறும் பெருவழிகள்
  1. இராச இராசன் பெருவழி
  2. இராசேந்திரன் பெருவழி
  3. குலோத்துங்கன் பெருவழி
  4. விளாங்குடையான் பெருவழி
  5. கூழையானை போன பெருவழி
  6. மேற்குநோக்கிப் போன பெருவழி[5]

போன்ற பெருவழிகள் கங்கை கொண்ட சோழபுரத்தை நோக்கி அமைந்திருந்தன.[6]

மற்ற பெருவழிகள்
  1. இராசராசபுர பெருவழி
  2. அரங்கம் நோக்கிய பெருவழி
  3. தஞ்சைப் பெருவழி
  4. பட்டினப் பெருவழி

தடிவழி வாரியம்

[தொகு]

மேற்கூறிய சாலைகளை உபயோகிப்பவர்களுக்கு தடிவழி வாரியம் மூலம் வரிவிதிக்கப்பட்டது.[7] எந்தெந்த ஊர்களின் வழியாக பெருவழிகள் சென்றனவோ அந்தந்த ஊர்களின் தடிவழி வாரியம் மூலம் பராமரிப்பு வரிகள் பெறப்பட்டன.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள்"
  2. பிற்கால சோழர் சரித்திரம்,3ஆம் பகுதி சதாசிவ பண்டாரத்தார், ப-107
  3. இந்திய வரலாறு, சத்தியநாதய்யர், முதல்பாகம், ப-425
  4. "envolution of hindu administrative institutions in south india" S.Krishnaswamy Iyengar, page 277-288
  5. இராசேந்திர சோழன் கல்வெட்டு
  6. குலோத்துங்க சோழன் கல்வெட்டு
  7. திருப்பாற்கடல் கல்வெட்டு, காவேரிப்பாக்கம் ஊர்மன்றம்
  8. "envolution of hindu administrative institutions in south india" S.Krishnaswamy Iyengar, page-279
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_கால_சாலைகள்&oldid=1760514" இலிருந்து மீள்விக்கப்பட்டது