உள்ளடக்கத்துக்குச் செல்

சோரயா அலேகோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோராயா அலேகோசி
Soraya Alekozei
பிறப்பு1955
காபுல், ஆப்கானித்தான்
பிள்ளைகள்2

சோரயா அலேகோசி (Soraya Alekozei) என்பவர் ஒர் ஆப்கானிய -செருமன் மொழி பெயர்ப்பாளர் ஆவார். முதுபெரும் படைத்துறை அதிகாரியாக 2004 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆறு முறை ஆப்கானித்தானுக்கு செருமன் இராணுவம் சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட அனுபவசாலியாவார். . அலேகோசி இராணுவ ஒளிபரப்பில் பணியாற்றினார். உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் செருமன் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை அதிகாரிகளுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். ஆப்கானித்தான் நாட்டின் காபூலில் இவர் ஒரு அனாதை இல்லத்தை நிறுவினார். அலோகோசி 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் மேம்படுத்தப்பட்ட ஒரு வெடிக்கும் கருவியால் பலத்த காயமடைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அனுபவங்களைப் பற்றி ஒரு நினைவுக் குறிப்பை எழுதினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அலேகோசி 1955 ஆம் ஆண்டு ஆப்கானித்தான் நாட்டு தலைநகரான காபூலில் [1] பிறந்தார். செருமனியுடனான இவரது முதல் கலாச்சாரத் தொடர்பு, மேற்கத்திய மனப்பான்மை கொண்ட இவருடைய தாத்தா மூலம் அமைந்தது. செருமனியின் ஆதரவுடன் நிறுவப்பட்ட அமானி உயர்நிலைப் பள்ளியில் இவருடைய தாத்தா படித்திருக்கிறார். இதனால் இருமொழி வல்லுநராக மாறியதால் பின்னர் ஆப்கானித்தான் அரசருக்கு ஓர் அதிகாரியாக இருந்தார். 18 ஆவது வயதில், இவர் தனது உறவினர் வாலியை மணந்தார். [2] அவர் வெளிநாட்டில் படிக்கும் திட்டத்தில் பங்கேற்றார் என்பதால் தம்பதியினர் இருவரும் 1976 ஆம் ஆண்டில் தங்களது படிப்புக்காக செருமனியில் உள்ள பான் நகருக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு அவர்களின் முதல் இரண்டு மகன்கள் பிறந்தனர். வீட்டு நினைவின் காரணமாக இல்லறத்தில் சில காலம் அவதிப்பட்ட பிறகு, அவர்கள் மீண்டும் காபூலுக்குத் திரும்பினர். சிறிது காலத்திற்குப் பின்னர் 1979 ஆம் ஆன்டு நடைபெற்ற சோவியத் -ஆப்கன் போர் காரணமாக இவர்கள் டிசம்பர் மாதத்தில் செருமனிக்குத் திரும்பினர். [3]

தொழில்

[தொகு]

அலேகோசி இடாய்ச்சு போசுட்டு பேங்கில் ரிசர்வு அதிகாரியாகப் பணிபுரிந்தார். [2] இவர் தனது குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாக 2004 ஆம் ஆண்டு இவர் பந்தேசுவர் எனப்படும் இராணுவத்தில் சேர்ந்தார். [2] அலேகோசி ஆப்கானித்தான் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கிடையில் ஒரு மொழிபெயர்ப்பாளராக மொழியப் பிரச்சினையை நடுநிலையாக்கினார் மற்றும் பிரான்சு யோசப் யங்கு மற்றும் மார்க்கசு கினெப் ஆகியோருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தார். [2] காபூலில் ஓர் அனாதை இல்லத்தை திறப்பதற்கு வழிவகுக்க நன்கொடைகளுக்காக இவர் நிதி திரட்டினார் மற்றும் இது தொடர்பாக பரப்புரை செய்தார். தனது ஆறாவது மற்றும் இறுதி பணியமர்வின் போது அதாவது 2011 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதியன்று அலேகோசி செருமன் இராணுவப் படையின் ஓர் உயர் அதிகாரியாக பதவியேற்றார். உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் செருமன் அதிகாரிகள் இடையே டலோகான் மாநாட்டில் ஒரு மொழிபெயர்ப்பாளராக இவர் பணியாற்றினார். மாநாட்டின் போது, 16 சக வீரர்களைக் கொன்ற ஒரு மேம்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் அலேகோசியும் காயமடைந்தார். இந்நிகழ்வுக்குப் பிறகு அலேகோசிக்கு முப்பத்து நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. [2] [1]

2014 ஆம் ஆண்டில், அலேகோசி தனது 2014 ஆம் ஆண்டின் அனுபவங்களைப் பற்றி ஒரு நினைவுக் குறிப்பை எழுதி வெளியிட்டார்: உல்சுடீன் மின்புத்தகங்கள். ISBN 978-3-8437-0918-7 . [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Käppner, Joachim. "Das bist nicht du". Süddeutsche.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.Käppner, Joachim. "Das bist nicht du". Süddeutsche.de (in German). Retrieved 2021-09-02.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Mackerodt, Maicke (29 December 2014). "Attentatsopfer Soraya Alekozei - Über 100 Splitter im Körper". Deutschlandfunk Kultur (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.Mackerodt, Maicke (29 December 2014). "Attentatsopfer Soraya Alekozei - Über 100 Splitter im Körper". Deutschlandfunk Kultur (in German). Retrieved 2021-09-02.
  3. 3.0 3.1 "Sie konnten mich nicht töten: Trauerspiel Afghanistan" (in de). Wichter, Hans-Dieter. "Sie konnten mich nicht töten: Trauerspiel Afghanistan". FAZ.NET (in German). ISSN 0174-4909. Retrieved 2021-09-02.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரயா_அலேகோசி&oldid=3281749" இலிருந்து மீள்விக்கப்பட்டது