செம்பு வோல்டாமானி
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
செம்பு வோல்டாமானி (Copper voltameter) என்பது செம்பு-செம்பு(II)சல்பேட்டு மின்முனையின் பயன்பாடுகளில் ஒன்றாகும்.. இந்த கூலம்பளவி ஓரளவு அமிலத்தன்மையுள்ள pH-buffered செம்பு(II)சல்பேட்டுக் கரைசலில் வைக்கப்பட்ட இரண்டு முற்றொருமித்த செம்பு மின்முனைகளால் ஆனதாகும்..கலத்தில் மின்னோட்டத்தைப் பாய்ச்சும்போது நேர்முனையில் கரையும் செம்பு மின்னணுக்கள் எதிர்முனையில் சென்று படிகின்றன. பல்வேறு மின்னோட்ட அடர்த்திகளுக்கு இவ்வினைகள் 100% திறமையைக் கொண்டுள்ளன.
கணக்கீடு
[தொகு]ஒவ்வொரு மின்முனையின் பொருண்மை மாற்றத்தையும் அளந்து கீழுள்ள சமன்பாட்டைப் ப்யன்படுத்தி, கலத்தின் ஊடே கடந்த மின்னூட்டம் மின்னூட்டத்தின் அளவை]] (மின்சாரத்தின் அளவைக்) கணக்கிடலாம்.
- ,
இங்கு:
- Q என்பது மின்சார அளவு (கூலம்புகளில்)
- என்பது கடத்தப்பட்ட பொருண்மை (gm)
- 2 என்பது ஈரினைதிறம் உள்ள மின்னணுக்களுக்கான கடத்தல் காரணியாகும்.
- F பாரடே மாறிலி (96485.3383 கூலம்புகள்/மோல்)
- 63.546 செம்பின் அணு எடை (கிராம்கள்/மோல்)
வரலாற்றுநிலையிலும் கோட்பாட்டுநிலையிலும் இந்த ஆய்கருவி ஆர்வம் ஊட்டுவதாக இருந்தாலும் நிகழ்காலத்தில் மின்ன்னியலாக மின்னோட்டத்தையும் நேரத்தையும் பெருக்கிப் பெறும் கூலம்பளவு, மின்முனை எடைவழி பெறுவதைக் காட்டிலும் எளிதாகவும் கூடுதலான துல்லியத்துடனும் குறுகிய நேரத்திலும் கிடைக்கிறது.