கூலம்பளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூலம்பளவியல்' என்பது ஒரு மின் பகுப்பாய்வு முறைகள் சார்ந்த பல நுட்பங்களின் தொகுப்புக்கு வழங்கும் பெயராகும். இம்முறையில் மின்னாற்பகுப்பு வினையின்போது நுகர்ந்த அல்லது உருவாக்கப்பட்ட, கூலம்பலகில் அளக்கப்பட்ட, மின்சாரத்தைக் கொண்டு வினையின்போது கடத்தப்பட்ட வினைபடு பொருளின் பொருண்மை அளக்கப்படுகிறது.[1] சார்லசு-அகஸ்டின் டெ கூலும் அவர்களின் நினைவாக இவ்வியல் பெயரிடப்பட்டுள்ளது.

கூலம்பளத்தல் நுட்பங்களில் இரண்டு முறைகள் உள்ளன. அவை நிலைமின்னிலைக் கூலம்பளவியல், நிலைமின்னோட்டக் கூலம்பளவியல் என்பனவாகும். நிலைமின்னிலைக் கூலம்பளவியல் வினையின்போது ஒரு மின்னிலை நிலைப்படுத்தியைப் பயன்படுத்தி மின்னிலை மாறாமல் பார்த்துக்கொள்கிறது. நிலைமின்னோட்டக் கூலம்பளவியல் , வினையின்போது ஒரு மின்னோட்ட நிலைப்படுத்தியைப் பயன்படுத்தி மின்னோட்ட்த்தை மாறாமல் பார்த்துக்கொள்கிறது.

நிலைமின்னிலைக் கூலம்பளவியல்[தொகு]

நிலைமின்னோட்ட கூலம்பளவியல்[தொகு]

பயன்பாடுகள்[தொகு]

கார்ல் ஃபிழ்சர் வினை[தொகு]

படலத் தடிப்பைக் கண்டறிதல்[தொகு]

கூலம்பளவிகள்[தொகு]

மின்னனியல் கூலம்பளவி[தொகு]

மின்னனியல் கூலம்பளவி "தொகுப்பி"- வகைச் சுற்றமைப்பில் இயக்கமுறை மிகைப்பியைப் பயன்படுத்திப் பெறப்படுகிறது. The current passed through the resistor R1எனும் தடையத்தில் பாயும் மின்னோட்டம் அதில் மின்னிலை வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வீழ்ச்சி கொண்மித் தட்டில் அமைந்த இயக்கமுறை மிகைப்பியால் தொகுக்கப்படுகிறது; மின்னோட்டம் உயர, மின்னிலை வீழ்ச்சியும் கூடும். மின்னோட்டம் நிலையாக இருக்கவேண்டிய தேவையேதும் இல்லை. இத்திட்டத்தில் Vout மதிப்பு, (i*t) எனும் கடந்த கூலம்பளவுக்கு நேர்விகித்த்தில் அமையும். தகுந்த R1 மதிப்பைத் தேர்வு செய்து கூலம்பளவியின் உணர்மை அல்லது உணர்திறனை (sensitivity) மாற்றலாம்.

மின்வேதிக் கூலம்பளவிகள்[தொகு]

மின்வேதி வினையைப் பொறுத்து கீழுள்ள மூவகைக் கூலம்பளவிகள் உள்ளன:

"வோல்டாமானி" என்பது "கூலம்பளவி" யின் இணைபெயராகும்..

மேற்கோள்கள்[தொகு]

  1. DeFord, Donald D. (1960). "Electroanalysis and Coulometric Analysis". Analytical Chemistry 32 (5): 31–37. doi:10.1021/ac60161a604. 

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலம்பளவியல்&oldid=2747333" இருந்து மீள்விக்கப்பட்டது