செமியோன் யாகோவிச் பிரவுதே
Appearance
செமியோன் யாகோவ்லேவிச் பிரவுதே (Semion Yakovlevich Braude, உக்ரைனியன்: Семен Якович Брауде; சனவரி 20, 1911 – சூலை 1, 2003) ஓர் உக்ரைனிய இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார்.[1]
ஆழ்சுகென்னாசி யூதரான பிரவுதே உக்ரைனில் உள்ள போல்தவாவில் பிறந்தார். இவர் கார்க்கோவ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். தன் இளவல் பட்டத்தை 1932 இல் இயற்பியலிலும் கணிதவியலிலும் பெற்றார்.[2]
1958 இல் இதழ் தோன்றிய நாள்தொட்டே, இவர் கதிர்வீச்சு இயற்பியலும் குவைய மின்ன்னியலும் எனும் இதழின் ஆசிரியக் குழு உறுப்பினராக விளங்கினார். இவர் தன் வாழ்நாளில் 5 தனிவரைவுநூல்களும் 300 அறிவியல் ஆய்வுரைகளும் வெளியிட்டு 35 முனைவர் பட்ட மாணவருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவர் 2003 இல் இறக்கும்வரையில் முனைவாகத் தொழில்முறை வாழ்க்கையில் செயல்பட்டார்.[2]
விருதுகளும் தகைமைகளும்
[தொகு]- சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் மற்றும் பொறியியலுக்கான மாநிலப் பரிசு, 1952.[2]
- உக்ரைன் மாநில அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பரிசு, 1977.[2]
- ஏ. எஸ். பப்போப் தங்கப் பதக்கம், சோவியத் அறிவியல் கழகம், 1983.[2]
- யூரோ-ஆசிய வானியல் கழகப் பரிசும், விருதும், 1997.[2]
- 2009 ஏப்ரல் 17 இல் உலகளாவிய வானியல் ஒன்றியம் நிலாவில் உள்ள குழி ஒன்றுக்கு பிராவுதே குழி எனப் பெயரிட்டது[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The ICHA Newsletter" (PDF). Newsletter for the Inter-Union Commission for History of Astronomy (International Astronomical Union) (6). April 2004. http://www.astro.uni-bonn.de/~pbrosche/iaucomm41/news/icha_news_06.pdf. பார்த்த நாள்: 2010-02-11.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "To the Memory of Semyon Ya. Braude". Radiophysics and Quantum Electronics 46 (8–9): 756. August 2003. doi:10.1023/B:RAQE.0000025009.56471.43. Bibcode: 2003R&QE...46..756..
- ↑ "Braude crater". Archived from the original on 2018-05-31. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
- ↑ "Braude". Gazeteer of Planetary Nomenclature. USGS. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.