உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி

ஆள்கூறுகள்: 12°40′15″N 79°58′48″E / 12.670871°N 79.980128°E / 12.670871; 79.980128
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி
official logo
உருவாக்கம்1965
Parent institution
துணைத் தலைவர்மரு.அனித்தா
துறைத்தலைவர்மரு.உசா சதாசிவம்
மாணவர்கள்500
பட்ட மாணவர்கள்100/ஒர் ஆண்டிற்கு மருத்துவர் மற்றும் செவிலியர்
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்82/ஒர் ஆண்டிற்கு
அமைவிடம்
GST Road, செங்கல்பட்டு - 603001
, , ,
இந்தியா

12°40′15″N 79°58′48″E / 12.670871°N 79.980128°E / 12.670871; 79.980128
இணையதளம்www.cmccpt.ac.in/cmccpt/
புதிய கட்டடங்கள்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி (Chengalpattu Medical College) செங்கல்பட்டில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனம். இதன் அமைவிடம் செங்கல்பட்டு நகரம், தமிழ்நாடு, இந்தியாவாகும். சென்னையிலிருந்து தென்மேற்கே 54 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5வது இடத்தில் உள்ளது

வரலாறு

[தொகு]

செங்கல்பட்டு மருத்துவமனை 1965க்கு முன்பு செங்கல்பட்டு நகரின் உள்பகுதியில் பழைய கட்டிடத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாகச் செயல்பட்டது. 1965ஆம் ஆண்டு தமிழக அரசின் மாவட்ட தலைமை மருத்துவமனையை மருத்துவக் கல்வி கற்பிக்கும் நிறுவனமாக மாற்றும் முடிவால் 250 படுக்கைகளுடன் மருத்துவப் பயிற்சி தொடங்கப்பட்டது. வேதாச்சலம் முதலியார் நகராட்சி மன்றத்தின் தலைவராக இருந்த போது,நன்கொடையாக ஒரு பரந்த நிலப்பகுதியை வழங்கினார். அந்த இடத்தில் அது முதல் கல்லூரி செயல்படுகிறது. 50 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் இயங்கி வருகிறது.[1]

தொடக்கம்

[தொகு]

1970ஆம் ஆண்டு, முதல் முறையாக மருத்துவக் கல்வி கற்பித்தல் தொடங்கப்பட்டது.தொடக்கம் முதல் 2012 ஆம் ஆண்டு வரை 50 மாணவர்கள் வீதம் ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் சேர்க்கை நடைபெற்றது.2012-13 கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது.1970 ஆம் ஆண்டு முதல் மாணவிகளும் கல்வி சேர்க்கையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.பீ.பீ.எஸ் பட்டப்படிப்பின் துவக்கம் முதல் 50 வயதான நிறுவனம்.


அடிப்படை துறைகள்

[தொகு]

இந்த மருத்துவமனையில் கீழ்கண்ட துறைகள் செயல்படுகிறது.[2][3][4]

  1. பொது மருத்துவம்
  2. அறுவை மருத்துவம்
  3. மகப்பேறு மருத்துவம்
  4. மகளிர் நோய் மருத்துவம்
  5. குழந்தை மருத்துவம்
  6. எலும்பு மருத்துவம்
  7. கண் மருத்துவம்
  8. காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்
  9. மனநல மருத்துவம்
  10. மார்பக மருத்துவம்

இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 3000 முதல் 3500 வெளிநோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது. உள்நோயாளிகளாக 600 முதல் 700 நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்கப்படுகிறது.

மேம்பட்ட மருத்துவ துறைகள்

[தொகு]

1)நரம்பியல்

2)இருதயவியல்

3)சிறுநீரகவியல்

4)குழந்தை அறுவையியல்

5)ஒட்டுறுப்பு அறுவையியல்

6)சிறுநீரியல்

7)நரம்பு அறுவையியல்

மேற்கோள்

[தொகு]
  1. "The Hindu : States / Tamil Nadu : MCI nod for admitting 200 more students". www.thehindu.com. Archived from the original on 4 February 2013. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  2. "Chengalpattu Medical College - Alumni Association". Chemcoalumni.org. Archived from the original on 2014-01-15. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.
  3. "Home". Tnmgrmu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Home". Tnmgrmu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  1. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செய்திகளில்
  2. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செய்திகளில்
  3. மன நலம் பற்றிய குறும்படம்; செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படைப்பு

வெளி இணைப்புகள்

[தொகு]

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி அதிகாரபூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2020-05-28 at the வந்தவழி இயந்திரம்