சூரிய ஒளித்திட்டு
சூரிய ஒளித்திட்டு (solar plage) என்பது சூரியனின் வண்ணக்கோளத்தில் உள்ள ஒளிப்பொட்டுகள் ஆகும். இவை பொதுவாக செயல் முனைவான பகுதிகளிலும் சூரியக் கரும்புள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. வரலாற்றியலாக, இவை இருண்ட திட்டுகளுக்கு மாறாக ஒளித்திட்டுகள் என்றும், ஒளிக்கோளத் திட்டுகளுக்கு மாறாக வண்ணக்கோளத் திட்டுகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன.[1] [2]
சொற்பிறப்பியல்
[தொகு]ஒளித்திட்டு என்ற சொல் பெரும்பாலும் "கடற்கரை"க்கான பிரெஞ்சு சொல்லிலிருந்து கவிதைசார் உருவகமாக எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது; இருப்பினும், இது 1893 ஆம் ஆண்டு என்றி-அலெக்சாந்திரே தெசுலாந்திரெசு எழுதிய கட்டுரையின் தவறான புரிதலாக இருக்கலாம். அங்கு திட்டுத் தணல்கள் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது. கட்டுரையில், டெஸ்லாண்ட்ரெஸ் அவர்களை பிளாஜெசு பிரில்லேண்டசு என்றும் குறிப்பிடுகிறார், அதாவது, ஒளித்திட்டுகள்,என, இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல்லாக மாறியது.
விளக்கம்
[தொகு]செவ்வியலாக சூரிய ஒளிதிட்டு என்பது Hα, பிற வண்னக்கோல உமிழ்வுக் கோடுகளில் பொலிவான பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கீழே உள்ள இதை ஒளிக்கோளக் காந்தப்புலச் செறிவின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். இதன் காந்தப்புலம் ஒளிக்கோளத்தில் உள்ள குறுணையிடைச் சந்துகளில் சுமார் 1500 கா வலிமையுடன் வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் வண்ணக்கோளத்தில் சுமார் 450 கா வலிமையுள்ள காந்தப்புலத்துடன் அக்கோளக் கவிப்பாக விரிவடைகிறது. [3] [4]
சிதைந்து வளர்ந்து வரும் பாயப் பகுதிகளிலிருந்து சூரிய ஒளித்திட்டு உருவாகிறது என்று நம்பப்படுகிறது, மேலும் பெரும்பாலும் சூரியப்புறணிக் கண்ணிகள் இழைகளுக்கான தடம் போல் செயல்படுகிறது, இது ஒளிப்புறணி வெப்பமாக்கலுக்கான முதன்மை இடைமுகமாக அமைகிறது.
மேலும் காண்க
[தொகு]- சூரிய சுழற்சி
- சூரிய இழைகள்
- சூரியக் குறுணை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Athay, R. Grant; Warwick, Constance S. (1961). "Indices of Solar Activity". In Landsberg, Helmut E.; Van Mieghem, J. (eds.). Advances in Geophysics. Vol. 8. Elsevier Science. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080568362.
- ↑ Athay, R. Grant. Advances in Geophysics. Elsevier Science.
- ↑ Pietrow, A. G. M.; Kiselman, D.; de la Cruz Rodríguez, J.; Díaz Baso, C. J.; Pastor Yabar, A.; Yadav, R. (2020). "Inference of the chromospheric magnetic field configuration of solar plage using the Ca II 8542 Å line". Astronomy and Astrophysics 644: 644. doi:10.1051/0004-6361/202038750. Bibcode: 2020A&A...644A..43P.
- ↑ Morosin, Roberta; de la Cruz Rodríguez, Jaime; Vissers, Gregal J. M.; Yadav, Rahul (2020). "Stratification of canopy magnetic fields in a plage region. Constraints from a spatially-regularized weak-field approximation method". Astronomy and Astrophysics 642: 642. doi:10.1051/0004-6361/202038754. Bibcode: 2020A&A...642A.210M.