சுற்றுக்கூம்புவெட்டு
முக்கோண வடிவவியலில் சுற்றுக்கூம்புவெட்டு (circumconic) என்பது ஒரு முக்கோணத்தின் மூன்று உச்சிகளின் வழியாகச் செல்லும் கூம்பு வெட்டு ஆகும்.[1] அதேபோல உட்கூம்புவெட்டு (inconic) என்பது முக்கோணத்தின் உட்புறமாக வரையப்பட்ட கூம்புவெட்டு ஆகும்.[2]
- A, B, C ஒரே கோட்டிலமையாத மூன்று வேறுபட்ட புள்ளிகள்.
- ΔABC முக்கோணத்தின் உச்சிகள் A, B, C.
- A முக்கோணத்தின் உச்சி மட்டுமல்லாது A இல் அமையும் முக்கோணத்தின் உச்சிக்கோணம் BAC ஐயும் குறிக்கும். இதேபோல B , C இரண்டும் முறையே முக்கோணத்தின் உச்சிக்கோணங்கள் ABC BCA ஐக் குறிக்கின்றன.
- a = |BC|, b = |CA|, c = |AB|, ΔABC முக்கோணத்தின் பக்கநீளங்கள்.
முந்நேரியல் ஆயதொலைவுகளில், ஒரு பொதுச் சுற்றுக்கூம்புவெட்டானது X = x : y : z என்ற முந்நேரியல் ஆயதொலைவுகள் கொண்ட புள்ளி X இன் இயங்குவரையாகும்.
மேலும் அக்கூம்புவெட்டு கீழ்வரும் சமன்பாட்டினை நிறைவு செய்யும்:
- (u : v : w ஏதேனுமொரு புள்ளி)
சுற்றுக்கூம்புவெட்டின் மீதமையும் A, B, C தவிர பிற புள்ளிகள் ஒவ்வொன்றின் சமகோண இணையியங்களும் கீழ்க்காணும் கோட்டின் மீதமையும்.
- = 0.
இக்கோடானது ΔABC இன் சுற்றுவட்டத்தை வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
- சுற்றுக்கூம்புவெட்டு நீள்வட்டமாக இருக்கும்பொழுது 0 ஆகவும்;
- சுற்றுக்கூம்புவெட்டு பரவளையமாக இருக்கும்பொழுது 1 ஆகவும்;
- சுற்றுக்கூம்புவெட்டு அதிபரவளையமாக இருக்கும்பொழுது 2 ஆகவும் இருக்கும்.
ΔABC இன் பொது உட்கூம்புவெட்டின் சமன்பாடு:
- .
மையங்களும் தொடுகோடுகளும்
[தொகு]சுற்றுக்கூம்புவெட்டு
[தொகு]பொதுச் சுற்றுக்கூம்புவெட்டின் மையப்புள்ளி:
- .
சுற்றுக்கூம்புவெட்டுக்கு முக்கோணத்தின் உச்சிகள் A, B, C இல் தொடுகோடாக அமையும் கோடுகள்:
- = 0,
- = 0,
- = 0.
உட்கூம்புவெட்டு
[தொகு]பொது உட்கூம்புவெட்டின் மையப்புள்ளி:
- .
ΔABC இன் பக்கக்கோடுகள் உட்கூம்புவெட்டின் தொடுகோடுகளாக அமையும். அவற்றின் சமன்பாடுகள்:
- .
பிற பண்புகள்
[தொகு]சுற்றுக்கூம்புவெட்டு
[தொகு]- வட்டமல்லாத ஒவ்வொரு சுற்றுக்கூம்புவெட்டும் ΔABC இன் சுற்றுவட்டத்தை A, B, C அல்லாத வேறொரு புள்ளியில் சந்திக்கும். ”நான்காம் வெட்டும் புள்ளி” என அழைக்கப்படும் இப்புள்ளியின் முந்நேரியல் ஆயதொலைவுகள்:
- பொது சுற்றுக்கூம்புவெட்டின் மீதமைந்த புள்ளி P = p : q : r எனில், P இல் சுற்றுக்கூம்புவெட்டிற்குத் தொடுகோட்டின் சமன்பாடு:
- என இருந்தால், இருந்தால் மட்டுமே, பொது சுற்றுக்கூம்புவெட்டு ஒரு பரவளையமாகும்.
- என இருந்தால், இருந்தால் மட்டுமே, பொது சுற்றுக்கூம்புவெட்டு ஒரு செவ்வக அதிபரவளையமாகும்.
உட்கூம்புவெட்டு
[தொகு]- என இருந்தால், இருந்தால் மட்டுமே, பொது உட்கூம்புவெட்டு ஒரு பரவளையமாகும். இது முக்கோணத்தின் ஒரு பக்கத்தினைத் தொட்டவாறும் மற்ற இரு பக்கங்களின் நீட்சியைத் தொட்டவாறும் அமையும்.
- , இரண்டும் வேறுபட்ட புள்ளிகள்;
- எனில்:
t இன் மெய்யெண் மதிப்புகளுக்கு X இன் இயங்குவரை ஒரு கோடாகும்.
- என வரையறுக்கப்பட்டால், X2 இன் இயங்குவரை ஒரு உட்கூம்புவெட்டாக, ஒரு நீள்வட்டமாக இருக்கும். அந்நீள்வட்டத்தின் சமன்பாடு:
இதில்:
- L = q1r2 − r1q2,
- M = r1p2 − p1r2,
- N = p1q2 − q1p2.
- முக்கோணத்தின் உட்புறமுள்ள ஒரு புள்ளியானது அம்முக்கோணத்தின் நடுப்புள்ளி முக்கோணத்தினுள் இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்தப் புள்ளி மூலமுக்கோணத்தின் உள்நீள்வட்டத்தின் மையப்புள்ளியாக இருக்க முடியும்.[3]:p.139 நடுப்புள்ளி முக்கோணத்துக்குள் அமையும் புள்ளியை மையமாகக் கொண்ட உள்நீள்வட்டம் தனித்துவமானது.[3]:p.142 அதாவது அத்தகைய உள்நீள்வட்டம் ஒன்றேயொன்றுதான் இருக்கும்.
- முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தியை மையமாகக் கொண்ட உள்நீள்வட்டம் ”நடுப்புள்ளி நீள்வட்டம்” என அழைக்கப்படும். ஒரு முக்கோணத்தின் உள்நீள்வட்டங்களிலேயே அதிகவளவு பரப்பளவு கொண்ட இந்த நீள்வட்டம் ஸ்டெயினர் உள்நீள்வட்டம் அழைக்கப்படுகிறது.[3]:p.145
- உள்நீள்வட்ட மையத்தின் ஈர்ப்புமைய ஆயதொலைவுகள் எனில்[3]:p.143:
- உள்நீள்வட்டமானது முக்கோணத்தின் பக்கங்களைத் தொடும்புள்ளிகளையும் அந்தந்த புள்ளிகளுக்கான முக்கோணத்தின் எதிர் உச்சிகளையும் இணைக்கும் கோடுகள் ஒருபுள்ளியில் சந்திக்கின்றன.[3]:p.148
நாற்கரங்களில்
[தொகு]ஒரு நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் மீது அந்நாற்கரத்தின் உள்நீள்வட்டங்களின் மையங்கள் அமைகின்றன.[3]:p.136
எடுத்துக்காட்டுகள்
[தொகு]- சுற்றுக்கூம்புவெட்டுகள்
- முக்கோணத்தின் மூன்று உச்சிகளின் வழியே செல்லும் சுற்றுவட்டம்
- ஸ்டெயினர் சுற்றுநீள்வட்டம்-முக்கோணத்தின் மூன்று உச்சிகள் மற்றும் நடுக்கோட்டுச்சந்தி வழியாகச் செல்லும் தனித்த சுற்றுநீள்வட்டம்
- கீபெர்ட் அதிபரவளையம்-முக்கோணத்தின் மூன்று உச்சிகள் மற்றும் நடுக்கோட்டுச்சந்தி, செங்கோட்டுச்சந்தி வழியாகச் செல்லும் தனித்த சுற்றுஅதிபரவளையம்
- ஜெராபெக் அதிபரவளையம் -முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மேல் மையப்புள்ளி கொண்டதும், முக்கோணத்தின் மூன்று உச்சிகள், செங்கோட்டுச்சந்தி மற்றும் சில குறிப்பிடத்தக்க மையங்களின் வழியாகச் செல்வதுமான செவ்வக அதிபரவளையம்.
- ஃப்யூயர்பக் அதிபரவளையம்-முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மேல் மையப்புள்ளி கொண்டதும், முக்கோணத்தின் செங்கோட்டுச்சந்தி, நாகெல் புள்ளி, மற்றும் பிற குறிப்பிடத்தக்க புள்ளிகள் வழியாகச் செல்வதுமான செவ்வக அதிபரவளையம்.
- உட்கூம்புவெட்டுகள்
- முக்கோணத்தின் மூன்று பக்கங்களையும் உட்புறமாகத் தொடுகின்ற உள்வட்டம்
- ஸ்டெயினர் உள்நீள்வட்டம்-முக்கோணத்தின் மூன்று பக்கங்களையும் அவற்றின் நடுப்புள்ளிகளில் தொடுகின்ற தனித்த நீள்வட்டம்.
- மாண்டார்ட் நீள்வட்டம், முக்கோணத்தின் வெளிவட்டங்கள் முக்கோணத்தின் பக்கங்களைத் தொடும் புள்ளிகளில் அப்பக்கங்களைத் தொடுகின்ற தனித்த நீள்வட்டம்.
- கீபெர்ட் பரவளையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weisstein, Eric W. "Circumconic." From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/Circumconic.html
- ↑ Weisstein, Eric W. "Inconic." From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/Inconic.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Chakerian, G. D. "A Distorted View of Geometry." Ch. 7 in Mathematical Plums (R. Honsberger, editor). Washington, DC: Mathematical Association of America, 1979.
வெளியிணைப்புகள்
[தொகு]- Circumconic at MathWorld
- Inconic at MathWorld