சுதந்திர பிரகடன உரை உருவாக்க அருங்காட்சியகம், ஜகார்த்தா

ஆள்கூறுகள்: 6°12′01″S 106°49′52″E / 6.2004°S 106.8311°E / -6.2004; 106.8311
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதந்திர பிரகடன உரை உருவாக்க அருங்காட்சியகம்
Museum Perumusan Naskah Proklamasi
The museum on Jl. Iman Bonjol
சுதந்திர பிரகடன உரை உருவாக்க அருங்காட்சியகம், ஜகார்த்தா is located in ஜகார்த்தா
சுதந்திர பிரகடன உரை உருவாக்க அருங்காட்சியகம், ஜகார்த்தா
Location within ஜகார்த்தா
நிறுவப்பட்டதுNovember 24, 1992
அமைவிடம்ஜேஎல். இமாம் போன்ஜோல் எண்.1, 10310, ஜகார்த்தா, இந்தோனேசியா
ஆள்கூற்று6°12′01″S 106°49′52″E / 6.2004°S 106.8311°E / -6.2004; 106.8311
வகைவரலாற்று அருங்காட்சியகம்
வலைத்தளம்http://www.munasprok.or.id/

சுதந்திர பிரடகன உரை உருவாக்க அருங்காட்சியகம் (Formulation of Proclamation Text Museum) ( இந்தோனேசிய மொழி: Museum Perumusan Naskah Proklamasi ) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அருங்காட்சியகம் ஆகும். இந்தக் கட்டடம் இந்தோனேசிய நாட்டிற்கான சுதந்திரத்தை பிரகடனம் வகுக்கப்பட்ட கட்டிடம் என்ற பெருமையை உடையதாகும்.

வரலாறு[தொகு]

கட்டிடம்[தொகு]

இந்த கட்டிடம் 1942 ஆம் ஆண்டில் ரியர் அட்மிரல் தடாஷி மைடாவின் இல்லமாக மாற்றப்பட்டது.

இந்த கட்டிடம் 1920 ஆம் ஆண்டில் ஜே.எஃப்.எல் பிளாங்கன்பெர்க்கின் என்பவர் தந்த வடிவமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்டது. இது 3,914 மீ 2 நிலப்பரப்பில் இரண்டு மாடிகளைக் கொண்டு அமைந்ததாகும். 1,138 மீ 2 ஆர்ட்-டெகோ பாணியில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. 1931 ஆம் ஆண்டில், இந்த கட்டிடத்தை நில்மிஜ் என்ற காப்பீட்டு நிறுவனம் வாங்கியது.[1] பசிபிக் போரின்போது, இந்த கட்டிடம் பிரித்தானிய பொதுத் தூதரகம் என்ற நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஜப்பான் காலத்தின் ஆக்கிரமிப்பின் போது, 1945 செப்டம்பரில் இந்தோனேசியாவில் நேச நாடுகளின் வருகை வரை இந்த கட்டிடம் ரியர் அட்மிரல் தடாஷி மைடாவின் இல்லமாகப் பயன்பட்டு வந்தது. இந்த கட்டிடம் 1961 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை ஆங்கில தூதரகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்தோனேசிய கல்வி மற்றும் கலாச்சாரத் துறைக்கு டிசம்பர் 28, 1981 அன்று வழங்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டில், இந்த கட்டிடம் அரசு நூலகமாகவும் பின்னர் அலுவலக கட்டிடமாகவும் மாற்றம் பெற்று செயல்படத் தொடங்கியது.

அருங்காட்சியகம்[தொகு]

சுதந்திர பிரகடன உரையை வகுப்பதில் இந்தக் கட்டிடத்தின் முக்கியமான பங்கு வகித்ததன் காரணமாக, 1984 ஆம் ஆண்டில், கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் நுக்ரோஹோ நோடோசுசாண்டோ அதன் பெருமையை உணர்த்துகின்ற வகையில் ஒரு அருங்காட்சியகமாக மாற்றுமாறு ஆணை பிறப்பித்தார்.[1] பிரகடன உரை அருங்காட்சியகத்தின் அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 24, 1992 ஆம் நாளன்று திறந்து வைக்கப் பெற்றது.

சேகரிப்புகள்[தொகு]

பிரகடன உரையை உருவாக்குவது தொடர்பான பொருட்களைக் கொண்டு,மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கட்டிடம் பல முறை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறி மாறி வந்ததால் இங்கு பெரும்பாலும் தளவாடங்களின் மாதிரிகளையே காண முடியும்.[1] இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்று நபர்களின் மெழுகு சிற்பங்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் பார்வையாளர்களுக்காகக் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் பின் புறத்தில் அமைந்துள்ள திறந்த வெளியில் இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட பங்கர் (தாக்கப்படுகின்ற குண்டு மற்றும் பிற தாக்குதல்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் மதிப்புமிக்க பொருள்களை வைத்துப் பாதுகாக்கவும் அமைக்கப்படுகின்ற பாதுகாப்பு ராணுவக் கோட்டை போன்ற சிறு அமைப்பு) உள்ளது. பார்வையாளர்கள் அந்த பங்கரில் உள்ளே நுழைந்து, உள்ளே இருப்பனவற்றை உள்ளது படி காணமுடியும். அங்கு தங்கவும் செய்யலாம். <ref=jpt/>

அந்த நாள்[தொகு]

இந்தோனேசிய நாட்டின் சுதந்திரத்திற்குச் சாட்சியாக அமைந்திருந்த இந்தக் கட்டடத்தில் நான்கு வரலாற்று சிறப்புமிக்க அறைகள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழையும்போது அதன் இடது புறத்தில் அட்மிரல் மைடா, சுகர்னோ ஹட்டா மற்றும் அகமது சோபர்ஜோ ஆகியோரை அவர்கள் ரெங்காஸ்டென்லாக் பகுதியிலிருந்து திரும்பிய பின்பு வரவேற்கின்ற அறை காணப்படுகிறது. சுகர்னோ ஹட்டா மற்றும் அகமது சோபர்ஜோ ஆகியோரை அட்மிரல் மைடா வரவேற்கின்ற அறைக்கு அடுத்த அறையில் இருந்து நேராகச் செல்லும்போது இந்தோனேசிய நாட்டிற்கான சுதந்திரத்திற்கான அறிவிப்பு வடிவம் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அறை அமைந்துள்ளது. சரியாக விடியற்காலை 3.00 மணி அளவில் At சுகர்னோ, ஹட்டா மற்றும் அகமது சோபர்ஜோ அங்குள்ள மேசையைச் சுற்றி அமர்ந்த நிலையில் இருந்தனர். அவர்கள் சுதந்திரத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதற்குத் தயாராகும் நிலையில் உள்ளனர். சுகர்னோ ஒரு துண்டுத்தாளில் ஒரு உரையை எழுதினார். ஹட்டா மற்றும் அகமது சோபர்ஜோ ஆகிய இருவரும் அதனை வாசித்தனர். சுதந்திர பிரகடனத்திற்கான உரையின் வரைவினைத் தயாரித்து முடித்த பின்னர் அந்த உரை மதிப்பு பெறுகிறது. தொடர்ந்து சுகர்னோவால், அந்த அறையில் உள்ள மக்களின் முன்பாக படித்துக் காட்டப் பெறுகிறது. அவர் படிக்கும்போது மிகவும் மெதுவாகப் படித்துக் காண்பித்தார். பின்னர் ஒப்பந்தத்திற்கான கருத்தினைக் கேட்டார். சுகர்னோ, சயூதி மேலிக் என்பவரிடம் அந்த சுதந்திர பிரகடனத்திற்கான உரையை தட்டச்சு செய்யும்படி கூறினார். சயூதி மேலிக் மாடிப்படிக்குக் கீழே உள்ள அறையில் இருந்தபடி அதனை தட்டச்சு செய்தார். அவர் தட்டச்சு செய்து கொண்டிருந்த சமயத்தில் பிஎம். டயா அருகில் இருந்தார். தட்டச்சிடப்பட்டுக் கொண்டிருந்த உரையில் சயூதி மேலிக் மூன்று சொற்களை மாற்றி அமைக்கிறார்.“Tempoh” என்பதை “tempo” என்றும், “Wakil wakil bangsa Indonesia ” என்பதை “Atas nama bangsa Indonesia” என்றும் மாற்றுவதோடு, உரையில் நாள் மாதம் மற்றும் ஆண்டினைக் குறிப்பிடுகிறார். பிறகு அந்த உரை மூன்றாவது அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதில் இந்தோனேசிய மக்களுக்காக சுகர்னோ மற்றும் ஹட்டா கையொப்பம் இடுகின்றனர். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு சுகர்னோ சுதந்திரப் பிரகடன உரை வாசிப்பு தன் வீட்டின் (தற்போது இந்த வீடு துகு பேடிர் என அழைக்கப்படுகிறது) முன்பாக காலை 10.00 மணிக்கு நிகழ்த்தப் பெறும் என்று தெரிவித்தார். <ref=jpt>Jakarta by train</ref>

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Museum Perumusan Naskah Proklamasi Indonesia". www.museumindonesia.com (in Indonesian). Museum Indonesia. 2009. பார்க்கப்பட்ட நாள் May 24, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)