உள்ளடக்கத்துக்குச் செல்

சீர்காழி காசி விசுவநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீர்காழி காசி விசுவநாதர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. கோயில் உள்ள இடம் கைவிழுந்த சேரி என்றும் கைவிளாஞ்சேரி என்றும் அழைக்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். இறைவி விசாலாட்சி ஆவார்.[1]

அமைப்பு

[தொகு]

மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள கோயில் முகப்பில் மூன்று நிலையில் ராஜ கோபுரம் உள்ளது. ராஜகோபுரத்திற்கு வெளியே வலப்புறத்தில் ஆஞ்சநேயரும், இடது புறம் அரச மரத்து விநாயகரும், ராகுவும், கேதுவும் உள்ளனர்.சிவன் கோயிலாக இருந்தாலும் சாஸ்தாவும் இங்கு காணப்படுகிறார். கைவிடேயப்பர் பூரண, புஷ்கலையுடன் உள்ளார். மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். திருச்சுற்றில் செல்வ விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கமல விநாயகர், துர்க்கையம்மன் ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. தேவகோஷ்டத்தில் தென் புறத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். இந்திராணியை கைவிடாது காப்பாற்றிய இடமாதலால் கைவிடேலப்பர் என்று சாஸ்தா அழைக்கப்படுகிறார்.[1]

திருவிழாக்கள்

[தொகு]

ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம், பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி, சிவராத்திரி, நவராத்திரி போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]