திட்டப்பிழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டப்பிழை (Standard error) என்பது புள்ளியியல் அளவையின் மாதிரிப் பரவலின் விலக்கம் ஆகும்.[1]

திட்டப்பிழை[தொகு]

ஒரு புள்ளியியல் அளவையின் மாதிரிப் பரவலின் திட்டவிலக்கமே திட்டப்பிழை எனப்படும்.[2] இதனை ஆங்கிலத்தில் S.E. எனக் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக சராசரி x̄ ன் மாதிரிப் பரவலின் திட்டவிலக்கம் [1] அச்சராசரியின் திட்டப்பிழை ஆகும்.

எனவே சராசரியின் திட்டப்பிழை  =

.

பெருங்கூறுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நன்கு அறிந்த புள்ளியியல் அளவைகளின் திட்டப்பிழைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் n என்பது மாதிரியின் அளவு , σ2 என்பது முழுமைத் தொகுதியின் மாறுபாடு மற்றும் P என்பது முழுமைத் தொகுதியின் விகிதசமம் ஆகும். மேலும் Q = 1- P. n1 மற்றும் n2 என்பன இரு மாதிரிகளின் அளவுகளாகும்.

வ.எண் புள்ளியியல் அளவை திட்டப்பிழை
1 மாதிரியின் சராசரி σ/√n
2 கண்டறியப்பட்ட மாதிரி விகிதசமம் √PQ/n
3 இரு மாதிரிகளின் சராசரிகளின் வித்தியாசம் √(σ12/n1 + σ22/n2)
4 இரு மாதிரிகளின் விகித சமங்களின் வித்தியாசம் √(P1Q1/n1 + P2Q2/n2)

திட்டப்பிழைகளின் பயன்பாடுகள்[தொகு]

திட்டப்பிழையானது பெருங்கூறு கோட்பாடுகளிலும் எடுகோள் சோதனைகளுக்கு அடிப்படையாகவும் பயன்படுகிறது. பண்பளவையின் மதிப்பீட்டின் நுண்மையின் அளவீடாக செயல்படுகிறது. திட்டப்பிழையின் தலைகீழியை மாதிரியின் நுண்மை அல்லது நம்பகத்தன்மையின் அளவாகக் கொள்ளலாம்.திட்டப்பிழையானது முழுமைத் தொகுதியின் பண்பளவை அமைவதற்கான நிகழ்தகவு எல்லைகளைக் கண்டுபிடிக்க ஏதுவாக அமைகிறது.

குறிப்பு[தொகு]

ஒரு மாதிரியின் அளவை அதிகரித்து புள்ளியியல் அளவையின் திட்டபிழையைக் குறைக்கலாம். ஆனால் இம்முறையில் செலவு, உழைப்பு மற்றும் நேரம் ஆகியவை அதிகரிக்கின்றன

மேற்கோள்கள்[தொகு]

  1. "cbse books". பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017.
  2. Altman, Douglas G; Bland, J Martin (2005-10-15). "Standard deviations and standard errors". BMJ : British Medical Journal 331 (7521): 903. doi:10.1136/bmj.331.7521.903. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-8138. பப்மெட்:16223828. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டப்பிழை&oldid=3458087" இலிருந்து மீள்விக்கப்பட்டது