உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: tt:Николай II
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: kk:Николай ІI
வரிசை 88: வரிசை 88:
[[jv:Nikolai II saking Rusia]]
[[jv:Nikolai II saking Rusia]]
[[ka:ნიკოლოზ II (რუსეთი)]]
[[ka:ნიკოლოზ II (რუსეთი)]]
[[kk:Николай ІI]]
[[ko:니콜라이 2세]]
[[ko:니콜라이 2세]]
[[la:Nicolaus II (imperator Russiae)]]
[[la:Nicolaus II (imperator Russiae)]]

18:09, 20 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் நிக்கலாஸ்
Nicholas II
ரஷ்யாவின் பேரரசன்
இரண்டாம் நிக்கலாசின் உருவப்படம்
ஆட்சிநவம்பர் 1, 1894 – மார்ச் 15, 1917
முடிசூட்டு விழாமே 26 [யூ.நா. மே 14] 1896
முன்னிருந்தவர்மூன்றாம் அலெக்சாண்டர்
பின்வந்தவர்அலெக்சி நிக்கலாயெவிச்
வாரிசு(கள்)ஒல்கா நிக்கலாயெவ்னா
தத்தியானா நிக்கலாயெவ்னா
மரீயா நிக்கலாயெவ்னா
அனஸ்தேசியா நிக்கலாயெவ்னா
அலெக்சி நிக்கலாயெவிச்
மரபுரொமானொவ் மாளிகை
தந்தைமூன்றாம் அலெக்சாண்டர்
தாய்மரீயா பியோதரொவ்னா (டென்மார்க்)

ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் (Nicholas II of Russia (மே 18 [யூ.நா. மே 6] 1868 – ஜூலை 17 [யூ.நா. ஜூலை 4] 1918) ரஷ்யப் பேரரசின் கடைசி மன்னனும், போலந்தின் மன்னனும்[1] பின்லாந்தின் இளவரசனும் ஆவான். இவனது இயற்பெயர் நிக்கலாய் அலெக்சாண்டிரொவிச் ரொமானொவ், ரஷ்ய மொழி: Никола́й II, Никола́й Алекса́ндрович Рома́нов) ஆகும்.

இரண்டாம் நிக்கலாஸ் 1894 ஆம் ஆண்டில் இருந்து 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் ரஷ்யாவின் மன்ன்னனாக இருந்தான். முதலாம் உலகப் போரில் ரஷ்ய இராணுவத்தைக் கொண்டு நடத்தினான். ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களால் அவனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவனது ஆட்சி ரஷ்யப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவனும் இவனது குடும்பமும் கைது செய்யப்பட்டு முதலில் அலெக்சாண்டர் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் டோபோல்ஸ்க் என்ற இடத்தில் ஆளுநர் மாளிகையிலும் கடைசியாக யெக்கத்தரின்பூர்க் என்ற இடத்திலும் சிறை வைக்கப்பட்டனர்.

படுகொலை

ரஷ்யாவின் கடைசி மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் குடும்பம்

1918 ஜூலை 16-17களில் நிக்கலாஸ், மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள் உட்பட முழுக் குடும்பமும் போல்ஷெவிக்குகளால் கொல்லப்பட்டனர்.

நிக்கலாசின் குடும்பம்

  • அலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி (பி. 1872)
  • ஒல்கா நிக்கலாயெவ்னா, இளவரசி (பி. 1895)
  • தத்தியானா நிக்கலாயெவ்னா, இளவரசி (பி. 1897)
  • மரீயா நிக்கலாயெவ்னா, இளவரசி (பி. 1899)
  • அனஸ்தாசியா நிக்கலாயெவ்னா, இளவரசி (பி. 1901)
  • அலெக்சி நிக்கலாயெவ், இளவரசன் (பி. 1904)

மேற்கோள்கள்

  1. 1831 இல் ரஷ்ய மன்னர்கள் போலந்தின் முடியாட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், அவர்கள் மிக விரைவில் போலந்தைக் கைப்பற்றி ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA