உருசியப் புரட்சி, 1917

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரஷ்யப் புரட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஷ்யப் புரட்சி (1917)
Russian Revolution of 1917.jpg
செஞ்‍சதுக்கத்தை நோக்கி முன்னேறும் போல்ஷ்விக் படைகள்.
நாள் மார்ச் – 8 நொவெம்பர் 1917
இடம் உருசியா
  • இரண்டாம் நிக்காலஸ் மன்னன் பதவியிறக்கப்படல்
  • உருசியப் பேரரசு வீழ்ச்சியுறல்
  • அதிகாரத்தை போல்ஷ்விக்குகள் கைப்பற்றுதல்
  • உருசிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாதல்.
பிரிவினர்
 உருசியா Flag of Russia.svg உருசிய இடைக்கால அரசு Socialist red flag.svg Petrograd Soviet
Socialist red flag.svg சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி
தளபதிகள், தலைவர்கள்
உருசியாவின் கொடி இரண்டாம் நிக்காலஸ் மன்னன் உருசியாவின் கொடி அலெக்ஸான்டர் கெரென்ஸ்கி Socialist red flag.svg விலாடிமிர் லெனின்

ரஷ்யப் புரட்சி 1917 என்பது, ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு மக்கள் புரட்சிகளையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் குறிக்கும். இப்புரட்சிகள் ரஷ்யப் பேரரசின் சமூக இயல்புகளை மாற்றியதுடன், ரஷ்ய அரசையும் மாற்றியமைத்தன. சாரிய சர்வாதிகாரம் அகற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. இது பெட்ரோகிராட் நகரை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது. தற்போது இந்நகரம் லெனின்கிராட் என்று அழைக்கப்படுகிறது.[1]

வரலாறு[தொகு]

1917[தொகு]

1917 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் முதலாளித்து‍வப் புரட்சி நடைபெற்றது‍. இதன் இறுதியில் டூமாவின் உறுப்பினர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டு ரஷ்ய இடைக்கால அரசொன்றை அமைத்தனர். சாரின் படைத் தலைவர்கள் புரட்சியை அடக்குவதற்கான வழிகள் எதுவும் இல்லையென உணர்ந்து கொண்டனர். கடைசி சார் மன்னரான இரண்டாம் நிக்கலாஸ் தனது பதவியைத் துறந்தார். சோவியத்துக்கள் எனப்பட்ட தொழிலாளர் சபைகள், தீவிர சமூகவுடமைப் பிரிவினரால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் தொடக்கத்தில் புதிய அரசை ஏற்றுக்கொண்ட போதும், அரசில் செல்வாக்குச் செலுத்துவதற்கான சிறப்புரிமைகளைக் கோரி வந்தனர். இது இரட்டை அதிகார நிலையை உருவாக்கியது. இடைக்கால அரசு அரச அதிகாரத்தைக் கொண்டிருக்க, தேசிய அளவில் பெரிய வலையமைப்பைக் கொண்டிருந்த சோவியத்துக்கள் பொருளாதார நிலையில் தாழ்ந்த வகுப்பினரதும் இடதுசாரிகளினதும் ஆதரவைப் பெற்று வலுவுடன் இருந்தது.

1918-1920 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர்[தொகு]

இடைக்கால அரசு போரைத் தொடர விரும்பியது. போல்செவிக்குகளும், இடதுசாரியினரும் போரைக் கைவிட விரும்பினர். போல்செவிக்குகள் தொழிலாளர் படையைச் செங்காவலராக மாற்றி அமைத்தனர். 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவானது. இது அக்டோபர் எழுச்சி அல்லது 25 ஆம் நாள் எழுச்சி என்று குறிப்பிடப்பட்டது. இது நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. சிந்தன், வி.பி (ஏப்ரல் 1985) (in தமிழ்). ரஷ்யப் புரட்சியின் வரலாறு. சென்னை: தமிழ் புத்தகாலயம். பக். 88. 
  2. "நவம்பர் புரட்சி!". மாற்று (நவம்பர் 7, 2013). மூல முகவரியிலிருந்து டிசம்பர் 12, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 12, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசியப்_புரட்சி,_1917&oldid=2086655" இருந்து மீள்விக்கப்பட்டது