நுரையீரல் அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: az:Ağciyər iltihabı
சி தானியங்கிஇணைப்பு: ml:ന്യുമോണിയ
வரிசை 45: வரிசை 45:
[[lv:Pneimonija]]
[[lv:Pneimonija]]
[[mk:Пневмонија]]
[[mk:Пневмонија]]
[[ml:ന്യുമോണിയ]]
[[ms:Paru-paru berair]]
[[ms:Paru-paru berair]]
[[new:निमोनिया]]
[[new:निमोनिया]]

19:16, 18 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

நுரையீரல் அழற்சி நுரையீரலின் நுண்பைகளை நீர்மத்தால் நிரப்புகிறது. இதனால் ஒட்சிசன் குருதியோட்டத்தை அணுக முடிவதில்லை. இடப்பக்க நுண்பைகள் சரியாக உள்ளன. இடப்பக்கம் நுரையீரல் அழற்சியால் விளைந்த நீர்மத்தால் நிரம்பியுள்ளது.

நுரையீரல் அழற்சி அல்லது நிமோனியா என்பது, நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் ஆகும். இது நுரையீரல் புடைக்கலவிழைய / நுண்குழி அழற்சியும், நுரையீரல் நுண்குழிகள் நீர்மத்தால் நிரம்புதல் என்றும் விளக்கப்படுகின்றது. நுரையீரல் நுண்குழிகள் என்பன, நுண்ணிய வளி நிரம்பிய பைகள் ஆகும். இவை நுரையீரலில் ஒட்சிசனை உறிஞ்சுவதற்குப் பொறுப்பானவை. நுரையீரல் அழற்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றுள் பக்டீரியா, வைரஸ், பங்கசுக்கள் அல்லது ஒட்டுண்ணிகளின் தொற்று; அல்லது நுரையீரலில் ஏற்படும் வேதியியல் காயங்கள் அல்லது உடற்காயங்கள் என்பன அடங்கும். தொற்றுக் காரணங்கள் இல்லாவிட்டால் இதன் காரணம் அறியப்படவில்லை என்றும் அதிகாரபூர்வமாக விபரிக்கப்படக்கூடும்.

இதற்கான அறிகுறிகள், இருமல், நெஞ்சு வலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கும். நோய் அறிவதற்கான முறைகளில் எக்ஸ்-கதிர் மற்றும் சளிப் பரிசோதனை என்பவை உள்ளடங்கும். இதற்கான சிகிச்சை நோயின் காரணத்தைப் பொறுத்தது. பக்டீரியாவினால் உண்டாகக்கூடிய நுரையீரல் அழற்சிக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் மருந்தாகப் பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரையீரல்_அழற்சி&oldid=595712" இலிருந்து மீள்விக்கப்பட்டது