தொராண்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: lv:Toronto
வரிசை 122: வரிசை 122:
[[la:Toronto]]
[[la:Toronto]]
[[lt:Torontas]]
[[lt:Torontas]]
[[lv:Toronto]]
[[nl:Toronto]]
[[nl:Toronto]]
[[nn:Toronto]]
[[nn:Toronto]]

18:23, 25 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Canadian City

ரொறன்ரோ (Toronto) கனடாவின் வர்த்தக, பண்பாட்டு, கல்வி மையமாகும். ரொறன்ரோ கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகானத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில், ஒன்ரோறியா ஆற்றுக்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது.


இங்கு 5,203,686 (கனடா புள்ளிவிபரங்கள் - 2004) பல இன மக்கள் வாழ்கின்றார்கள். உலகிலேயே அதி கூடிய பல இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் ரொறன்ரோவில் வாழ்கின்றார்கள். இவ் வகையில் ரொறன்ரோ உலகின் அதி சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவின் சிறப்பு இடங்கள்

  • சிஎன் கோபுரம் (CN Tower)
  • டன்டாஸ் சதுக்கம் (Dundas Square)
  • இரென்ஸ் வியாபார அங்காடி (Eatons Shopping Center)
  • ஒன்ராரியோ விஞ்ஞான மையம் (Ontario Science Center)
  • மாகான நாடாளுமன்றம் (Queens Park - Ontario Parliment)
  • கை பார்க் (பூங்கா) (High Park)
  • ரொறன்ரோ மிருக காட்சி சாலை (Toronto Zoo)
  • ரொறன்ரோ தீவுகள் (சென்ரவில் விளையாட்டு பூங்கா) (Toronto Islands - Centreville Amusement Park)
  • ஒன்ராறியோ பிளேஸ் (Ontario Place)
  • ரோயல் ஒன்ராறியோ பொருட்காட்சிச்சாலை (Royal Ontario Museum)
  • ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம் (Art Gallery of Ontario)
  • ரோயேர்ஸ் மையம் (Rogers Center/Skydome)
  • கனடா விளையாட்டு-வியப்பு பூங்கா (Canada's Wonderland)


அரசு

ரொறன்ரோ ஒன்ராறியோ மாகனத்தின் தலைநகரம் ஆகும். மத்திய ரொறன்ரோவில் தான் ஒன்ராறியோ மாகான நாடாளுமன்றம் அமைந்துள்ளது. ரொறன்ரோ மக்களை 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மகான நாடாளுமன்றத்திலும், மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதிப்படுத்துகின்றார்கள்.


ரொறன்ரோ நகராட்ச்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், ரொறன்ரோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.


கல்வி

ரொறன்ரோவில் மூன்று பல்கலைக்கழகங்கள், நான்கு தொழில் கல்லூரிகள், ஒரு பெரிய ஓவிய கல்லூரி, பல தனியார் கல்வி நிறுவனங்கள், ஆய்வு கூடங்கள் மற்றும் பல சிறந்த நூலகங்கள் அமைந்துள்ளன.


ரொறன்ரோ பல்கலைக்கழகம் கனடாவின் முதன்மை பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். யோர்க் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். றயர்சன் பல்கலைக்கழகம் நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.

ரொறன்ரோவில் தமிழர்கள்

ரொறன்ரோவில் 200 000 மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக பொதுவாக கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் 1983க்குப் பின்னர் இலங்கை இனக்கலவரங்கள் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பலர் ரொறன்ரோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், ரொறன்ரோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொராண்டோ&oldid=59029" இலிருந்து மீள்விக்கப்பட்டது