பேச்சு:தொராண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இவ்வுரையாடலின் முடிவுகள் விக்கிபீடியா:எழுத்துப்பெயர்ப்பு அல்லது அதன் பேச்சுப் பக்கத்தில் சேர்க்கப்படவேண்டும்
இவ்வுரையாடலின் முடிவுகள் விக்கிபீடியா:பெயரிடல் மரபு அல்லது அதன் பேச்சுப் பக்கத்தில் சேர்க்கப்படவேண்டும்

இந்த ஊரை தமிழ்நாட்டு ஊடகங்களில் டொரண்டோ (டொரன்டோ?) என்று குறிப்பிடுவது தான் வழக்கம். அந்தப்பெயரிலும் வழிமாற்றுப்பக்கம் ஒன்றை உருவாக்கலாம்--ரவி (பேச்சு) 18:40, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

ரவி மிகவும் பரிச்சியமான இடப் பெயர்களை தவிர (உ+ம்: சீனா சைனா), எனது கருத்தில் ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்ற மாதிரி எழுதுவதுதான் பொருத்தம் என்று படுகின்றது. எனினும் நான் இதை வலியுறுத்துவது கிடையாது (உ+ம்: யேர்மனி). ரொறன்ரோ என்றே பெரும்பாலும் இங்கே எழுதுவார்கள். நீங்கள் கூறியபடி வழிமாற்றுபக்கம் ஒன்றை ஏற்படுத்திவிட்டால் இந்த விதயம் இலகுவாக தீர்ந்து விடும்.
குறிப்புக்கு:
ரொறன்ரோ
ரொரன்ரோ
ரொரன்டோ
ரொரண்டோ
ரொறன்டோ
ரொறண்டோ
--Natkeeran 20:58, 17 ஆகஸ்ட் 2005 (UTC)
ஆங்காங்கே இதுபோல் நாம் செய்யும் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முடிவுகள் அது தொடர்பான கொள்கைப் பக்கங்களிலோ அல்லது குறைந்தது அவற்றின் பேச்சுப் பக்கங்களிலோ தொகுக்கப்படுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, மேலே உள்ள கருத்துக்கள் விக்கிபீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்பு என்கிற பக்கத்தில் தொகுக்கப்பட வேண்டும். -- Sundar \பேச்சு 05:00, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

இப்பக்கத்தை ரொறன்ரோ என முன்னிருந்தவாறு மீளமைக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 07:09, 6 மே 2012 (UTC)

நன்றி. அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 17:49, 7 மே 2012 (UTC)


இப்பக்கத்தின் தலைப்பை ரொறொன்ரோ என்ற தலைப்பிற்கு மாற்ற பரிந்துரை செய்கிறேன். காரணம் அல்லது சான்று, பார்க்க -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:21, 29 செப்டெம்பர் 2012 (UTC)👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 05:42, 29 செப்டெம்பர் 2012 (UTC)

தென்கிழக்காசிய மொழிகளில் இது தொராந்தோ என்று அழைக்கப்படுகிறது. தமிழ் இலக்கணத்துக்கும் அது பிழையில்லாதது. அவ்வாறு மாற்றினாலென்ன? ஏராளமான மொழிகளில் T எழுத்து இலத்தீன் மொழியின் அடிப்படையில் த ஓசையுடனேயே மொழியப்படுகின்றது. ஆங்கிலத்தில் இவ்வெழுத்து கட்டம் என்பதில் வரும் டகரம் போல் மொழியப்பட்டாலும் செமித்திய மொழிகள், இந்தோமலாய மொழிகள் போன்றவற்றில் அவ்வோசை காணப்படுவதில்லை. அவ்வாறே மேற்படி எழுத்தின் மூல மொழியாகிய இலத்தீனிலும் அவ்வோசை காணப்படுவதில்லை. ஆதலினாற்றான் இது ஓசையுடன் மொழியப்படுகிறது. தமிழ் மொழியில் டகரம் மொழிக்கு முதலில் வர முடியாதென்பதால், நாமும் அவ்வழக்கத்தைப் பின்பற்றி த ஓசையுடன் ஒலிபெயர்ப்புக்களை அமைப்பது சாலச் சிறந்ததென நினைக்கிறேன். இவ்வடிப்படையிலேயே நாம் யப்பானிய மொழியில் தோக்கியோ என்றுள்ள பெயரையும் அமைத்தோம் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 05:10, 25 சூன் 2013 (UTC)

ரொறொன்ரோ, ரொறன்ரோ ஆகிய இரண்டும் வழக்கில் உள்ளது. ரொறன்ரோ பேச்சு மொழிக்கு ஒத்தது, கூடிய வழக்கில் உள்ளது. இரண்டிலும் எனக்கு உடன்பாடே. --Natkeeran (பேச்சு) 17:33, 22 சூலை 2013 (UTC)

தொராண்டோ, தொரான்றோ[தொகு]

மேலே பயனர் @Fahimrazick: கூறிய கருத்துடன் ஒப்புகின்றேன். அவர் தொராந்தோ என்பதைக் குறிப்பிட்டார். அது வேண்டாம் எனில் தொராண்டோ அல்லது தொரான்றோ என்று எழுதலாம். கனடாவிலே பலர் பலவிதமாக எழுதி வந்துள்ளனர். இப்பொழுது ரொறன்ரோ என்று இலங்கைத் தமிழர்கள் எழுதுகின்றார்கள். இது தமிழின் எந்த விதிமுறைகளையும் ஒலிப்புவிதிகளையும் பின்பற்றாதது. எனவே தொராண்டோ என்றோ தொரான்றோ என்றோ எழுதலாம் எனப் பரிந்துரைக்கின்றேன். இதுபற்றி @Natkeeran, Kanags, Mayooranathan, மற்றும் Sundar: ஆகியோர் கருத்துரைக்க வேண்டுகின்றேன். இலங்கை வழக்கம் தமிழ்நாட்டு வழக்கம் என்பதைக் காட்டிலும் எது நல்ல முறையான தமிழ்வழக்கம் என்று கருதி முடிவெடுப்பது நல்லது.--செல்வா (பேச்சு) 15:01, 26 பெப்ரவரி 2017 (UTC)

தொரான்றோ என்பது ஒலிப்புக்குக் கிட்டவாக இல்லை. தொராண்டோ என்பதில் எனக்கு உடன்பாடு.--Kanags \உரையாடுக 06:27, 27 பெப்ரவரி 2017 (UTC)
மிக்க நன்றி @Kanags:. --செல்வா (பேச்சு) 18:00, 27 பெப்ரவரி 2017 (UTC)
இக்கட்டுரையின் தலைப்பைத் தொராண்டோ என மாற்றலாமா? இது சரியான நிலையான பெயராக இருக்க வாய்ப்புகள் கூடவுள்ளது. இலக்கணப்படியும் சரியானது. @Natkeeran, Kanags, Mayooranathan, மற்றும் Sundar: --செல்வா (பேச்சு) 04:23, 4 மார்ச் 2017 (UTC)
எனக்கு உடன்பாடு.--Kanags \உரையாடுக 06:51, 4 மார்ச் 2017 (UTC)
ஆம். இது எனக்கு ஏற்புடையதே. -- சுந்தர் \பேச்சு 06:13, 9 மார்ச் 2017 (UTC)
உடன்படுகிறேன். --மயூரநாதன் (பேச்சு) 16:22, 17 மார்ச் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொராண்டோ&oldid=2208060" இருந்து மீள்விக்கப்பட்டது