தீபிகா படுகோண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: mr:दीपिका पडूकोण; cosmetic changes
Jackie (பேச்சு | பங்களிப்புகள்)
சி interwiki add: ru
வரிசை 119: வரிசை 119:
[[no:Deepika Padukone]]
[[no:Deepika Padukone]]
[[pl:Deepika Padukone]]
[[pl:Deepika Padukone]]
[[ru:Падуконе, Дипика]]
[[te:దీపిక పడుకొనే]]
[[te:దీపిక పడుకొనే]]
[[zh:荻皮卡·帕都恭]]
[[zh:荻皮卡·帕都恭]]

20:29, 24 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

தீபிகா படுகோணெ
Deepika Padukone

பிறப்பு சனவரி 5, 1986 (1986-01-05) (அகவை 38)
கோப்பன்ஹேகன், டென்மார்க்
தொழில் விளம்பர அழகி, நடிகை
நடிப்புக் காலம் 2004–இன்று

தீபிகா படுகோணெ (கன்னடம்: ದೀಪಿಕಾ ಪಡುಕೋಣೆ ) (பி. ஜனவரி 5, 1986) ஒரு இந்திய திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார்.

டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோணெவுக்கு பிறந்தார். அ‌வ‌ரின் த‌ந்தையான‌ பிர‌காஷ் படுகோணெ ஒரு புகழ்பெற்ற பூப்பந்தாட்ட ஆட்டக்கார‌ர்.

பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது ஒப்பனையழகித் தொழில் துறையில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

படுக்கோன் உஜாலா மற்றும் பிரகாஷ் படுக்கோன் ஆகியோருக்கு ஜனவரி 5, 1986 ல் டென்மார்க்கில் உள்ள கொப்பென்ஹகனில் பிறந்தார். இவர் வெறும் பதினொரு மாத வயதாக இருக்கும் போது இவர் குடும்பம் இந்தியாவில் பெங்களூருக்கு நகர்ந்தது[1]. இவரது பெற்றோர் இந்தியாவில், கர்நாடகாவில், உடுப்பி மாவட்டத்தில் குண்டபுரா தாலுக்கில் உள்ள படுக்கோன் என்ற கிராமத்திலிருந்து வந்தனர்[2]. இவரது தந்தை பிரகாஷ் படுக்கோன் சர்வதேச அளவில் மதிப்புள்ள பூப்பந்தாட்ட வீரர் மற்றும் தாய் ஒரு பயண முகவர். படுக்கோனுக்கு 1991 இல் பிறந்த அனிஷா என்ற இளைய தங்கையும் 1993 ல் பிறந்த ஒரு சகோதரனும் உள்ளனர்[3].

படுக்கோன் பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளிக்கு சென்றார். பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் தனது பல்கலைகழக முன்பாடக்கோப்பு படிப்புகளை முடித்தார்[4]. இவர் உயர்நிலைப் பள்ளியில் இருக்கும்பொழுதே தன் தந்தையை போல மாநில அளவில் பூபந்தாட்டம் விளையாடினார் மற்றும் இவர் தந்தையின் பூபந்தாட்ட சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்[5]. இருந்தாலும், இவர் பூப்பந்தாட்டத்தில் சாதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை எனவே இதை விட்டுவிட்டு தன் ஐசிஎஸ்சி பரீட்சைகளில் கவனம் செலுத்தினார்[6].

பணித்துறை

விளம்பரப் படம்

கல்லூரியில் படிக்கும் பொழுதே, படுக்கோன் விளம்பரத் துறையை தன் பணிதுறை ஆக்கிக்கொண்டார்[7]. பல ஆண்டுகளாக, இவர் விளம்பரம் செய்த இந்திய வர்த்தக குறிகளின் பெயர்கள் லிரில், டாபர் லால் பவுடர், குளோஸ் அப் டூத் பேஸ்ட் (close up tooth paste) மற்றும் லிம்கா, மற்றும் இந்திய நகைகளின் சில்லறை வர்த்தக நகைக்கான ஷோவின் "வியாபார தூதர்" ஆவார். ஒப்பனை பொருள் ஸ்தாபனமான மேபலின் இவரைத் தன் சர்வதேச பிரதிநிதியாக்கியது.

கிங்க்ஃபிஷரின் ஐந்தாவது ஆண்டு பாஷன் விருதுகளில் "இந்த ஆண்டு மாடல்" என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு, இவர் கிங்க்ஃபிஷரின் ஒரு மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீச்சலுடை 2006 இன் நாள்காட்டி மற்றும் ஐடியா ஜீ பாஷன் விருதுகளில் இரண்டு பரிசு கோப்பைகள் வென்றார்: "இவ்வாண்டின் விளம்பர அழகி - (வர்த்தக வேலைகள்)" மற்றும் "ஆண்டின் புதிய முகம்". படுக்கோன் கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் லெவி ஸ்ட்ராஸ் மற்றும் டிசொட் எஸ்எ இன் வியாபார தூதராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்[8].

நடிப்பு

விளம்பரத்துறையில் வெற்றிக்கண்ட படுகோன் பிறகு நடிப்பு திரைக்கு சென்றார். இவர் ஹிமேஷ் ரேஷம்மியா அவர்களால் ஆப் கா சரூர் என்ற தனிப்பட்ட பாப் ஆல்பத்தில் நாம் ஹாய் தேரா என்ற வீடியோ இசையில் நடிக்க ஆரம்பித்தார்.

2006 இல், படுக்கோன் தன் சினிமா அரங்கேற்றத்தை ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தில் நடிகர் உபெந்திராவுக்கு சோடியாக நடித்தார். இதன் பிறகு இவர் பாலிவுட்டில் 2007 இல் சர்வதேச அளவில் வெற்றிபெற்ற ஃபரா கானின் ஓம் ஷாந்தி ஓம் படத்தில் ஷாருக் காக்கு எதிராக நடித்தார்[9][10]. இந்த படம் இவரை முதலில் 1970 இன் நட்சத்திரம் ஷாந்தி பிரியாவாகவும் பின்னர் சந்தியா, ஷாந்தி பிரியாவை போல நிகரான தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணாகவும் காட்டியது. இவருடைய இந்த செயல்பாடு இவருக்கு நல்ல வரவேற்பை தந்து பிலிம் பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை பெற்று தந்தது. இதனுடன் இவருக்கு முதல் பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். Indiafm.com இருந்து தரன் ஆதர்ஷ் கூறியது, "தீபிகாவிடம் நட்சத்திரமாகும் அனைத்து திறனும் உள்ளது - தோற்றம், மனோபாவம் மற்றும் அவர் மிக திறமை பெற்றவர். எஸ்ஆர்கே(SRK) போல ஒரே சட்டத்தில் நின்றுக்கொண்டு சரியாக பெறுவது என்பது சாதாரண சாதனை அல்ல. இவர் காற்றில் இருந்து திடீரென வருகிறார்!"[11].

படுக்கோன் அடுத்து தோன்றியது சித்தார்த் ஆனந்தின் பச்ன ஏ ஹசினோ (2008), ரன்பீர் கபூருடன், அதன் பிறகு வார்னர் பிரதர்ஸ் - பாலிவுட் கூட்டில் ஜனவரி 16, 2009 இல் வெளிவந்த சாந்தினி சௌவ்க் டு சைனா. ஜனவரி 2009 முதல் இவர் இம்தியாஸ் அலியின் லவ் ஆஜ் கல் திரைப்படத்தில் பணிபுரிகிறார்.

விருதுகளும் தேர்ந்தெடுப்புகளும்

பிலிம் பேர் விருதுகள்

வெற்றியாளர்

தேர்ந்தெடுக்கப்பட்ட

திரை நட்சத்திர விருதுகள்

வெற்றியாளர்

ஜீ சினே விருதுகள்

வெற்றியாளர்

தேர்ந்தெடுக்கப்பட்ட

ஐஐஎப்ஏ விருதுகள்

வெற்றியாளர்

தேர்ந்தெடுக்கப்பட்ட

ஸ்டார் டஸ்ட் விருதுகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட

அப்சரா பட மற்றும் தொலைகாட்சி தயாரிப்பாளர்களின் கில்ட் விருதுகள்

வெற்றியாளர்

  • 2008: அப்சரா பட மற்றும் தொலைகாட்சி தயாரிப்பாளர்களின் கில்ட் விருதுகள்' சிறந்த பெண் அறிமுகம்; ஓம் ஷாந்தி ஓம்[20]

மற்ற விருதுகள்

திரைப்படக்கலை

வருடம் படம் பாத்திரம் மற்ற குறிப்புகள்
2006 ஐஸ்வர்யா ஐஸ்வர்யா கன்னடம்
2007 ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி பிரியா /
சந்தியா (சாண்டி)
இரட்டிப்பு வெற்றி, பிலிம் பேரின் சிறந்த அறிமுக நடிகை விருது மற்றும்
சோனி ஹெட் அன் ஷோல்டர்சின் ஆண்டுக்கான புதுமுகம்.
பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2008 பச்ன ஏ ஹசினோ காயத்ரி
2009 சாந்தினி சொவ்க் டு சைனா சகி / மியாவ் மியாவ் இரட்டை வேடம்
பில்லு இவராக லவ் மேரா ஹிட் ஹிட் பாடலில் சிறப்பு தோற்றம்
லவ் ஆஜ் கல் மீரா படப்பிடிப்பு

குறிப்புகள்

  1. "A smashing success". Newindpress.com. பார்க்கப்பட்ட நாள் 2005-06-24.
  2. http://www.daijiworld.com/chan/music_view.asp?m_id=4
  3. "'I'm completely charmed by Ranbir'". Times of India (Chaturvedi, Vinita). பார்க்கப்பட்ட நாள் 2008-08-29.
  4. http://entertainment.oneindia.in/celebrities/star-profile/deepika-padukone-profile-040907.html
  5. "Transcript of LIVE CHAT with Model, Deepika Padukone at 12 noon on Thursday, March 3, 2005 in Mumbai". Indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2005-03-03.
  6. "Deepika Padukone - Biography". DeepikaPadukone.com. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
  7. "Smash hit on the ramp". Indiatimes.
  8. "Buy Deepika Padukone's pair of jeans". oneindia.com.
  9. "Box Office 2007". BoxOffice India.com. பார்க்கப்பட்ட நாள் March 7. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  10. "Overseas Earnings (Figures in Ind Rs)". BoxOffice India.com. பார்க்கப்பட்ட நாள் March 7. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  11. Adarsh, Taran (November 7, 2007). "Movie Review: Om Shanti Om". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 2007-12-18.
  12. 12.0 12.1 Bollywood Hungama News Network (February 23, 2008). "Winners of 53rd Fair One Filmfare Awards". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
  13. Bollywood Hungama News Network (February 6, 2008). "Nominees - 53rd Annual Filmfare Awards". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 2008-02-06.
  14. 14.0 14.1 IBNLive.com (January 10, 2008). "Taare... sweeps Screen Awards, but Chak De named best film". CNN-IBN. பார்க்கப்பட்ட நாள் 2008-01-10.
  15. Bollywood Hungama News Network (April 27, 2008). "Winners of the Zee Cine Awards 2008". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 2008-04-27.
  16. Nijjar, Lucky (March 29, 2008). "ZEE Cine Awards nominations list announced". Biz Asia. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01.
  17. "And the award goes to..." IBNLive. June 9, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-08.
  18. Bollywood Hungama News Network (April 16, 2008). "Nominations for the IIFA Awards 2008". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 2008-06-08.
  19. IndiaFM News Bureau (December 25, 2007). "Nominations for Max Stardust Awards 2008". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 2007-12-31.
  20. PTI (March 31, 2008). "'Chak De..' has a field day at Producers Guild Awards". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01.
  21. Indiantelevision.com Team (December 24, 2007). "SRK is Star Gold's 'Sabsey' favourite hero". Indiantelevision.com. பார்க்கப்பட்ட நாள் 2007-12-24.
  22. Kotwani, Hiren (December 30, 2007). "Starry debut for HT Café Film Awards". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2007-12-31.
  23. TNN (January 16, 2008). "Deepika:2008 Glam Debutante". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2008-01-15.
  24. IANS (March 11, 2008). "OSO sweeps Central European Awards". Sify. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_படுகோண்&oldid=463188" இலிருந்து மீள்விக்கப்பட்டது