போரிஸ் பாஸ்ரர்நாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ko:보리스 파스테르나크
சி தானியங்கி மாற்றல்: ku:Borîs Pasternak
வரிசை 61: வரிசை 61:
[[ja:ボリス・パステルナーク]]
[[ja:ボリス・パステルナーク]]
[[ko:보리스 파스테르나크]]
[[ko:보리스 파스테르나크]]
[[ku:Boris Pasternak]]
[[ku:Borîs Pasternak]]
[[lv:Boriss Pasternaks]]
[[lv:Boriss Pasternaks]]
[[ml:ബോറിസ് പാസ്തനാര്‍ക്ക്]]
[[ml:ബോറിസ് പാസ്തനാര്‍ക്ക്]]

03:21, 30 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Pasternak.jpg
போரிஸ் பாஸ்ரர்நாக்

போரிஸ் லியோனிடவிச் பாஸ்ரர்நாக் (Boris Leonidovich Pasternak, (ரஷ்ய மொழி: Борис Леонидович Пастернак) (பெப்ரவரி 10 1890 - மே 30, 1960) ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார். 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் தனது டாக்டர் ஷிவாகோ புதினத்துக்காகப் பெற்றவர். இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச் சார்ந்தவர்களினதும் நடைமுறை உண்மையை எடுத்துக் காட்டியிருந்தார். அக்டோபர் புரட்சியின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களை விவரித்திருந்தார். இந்நாவல் முதன் முதலில் இத்தாலிய மொழியில் 1957இல் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1958இல் வெளிவந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

மொஸ்கோவில் 1890 இல் பிறந்தவர் பாஸ்ரர்நாக். இவரது தந்தை லியனீட் பபஸ்ரர்நாக் ஒரு யூத இனத்தைச் சேர்ந்த ஒரு painter. தாயார் ரோசா ராயிட்சா கோஃப்மான், பியானோ இசைக் கலைஞர். போரிஸ் முதலில் இசைப் பயிற்சி பெற்று பின்னர் கலைத் துறையில் நாட்டம் கொண்டார். பின்னர் 1910 இல் மாபர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்கண்டியன் சித்தாந்தவாதிகளான ஹேர்மன் கோஹன் மற்றும் நிக்கலாய் ஹார்ட்மன் ஆகியோரின் கீழ் தத்துவம் பயின்றார்.

எழுத்தாளராக

பெரெடெல்கினோ என்ற இடத்தில் பாஸ்ரர்நாக் வாழ்ந்து மறைந்த இல்லம்

1914இல் மொஸ்கோ திரும்பி எழுத்துலகில் புகுந்தார். பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். The twins I the clouds (1914), Over the Barriers (1917), My sister Life (1917) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

புரட்சி நிலவிய காலத்தில் அவர் பிரபல கவிஞர்களான சிர்கேய் எசெனின் (Sergei Esenin), விளாதிமீர் மயக்கோவ்ஸ்கி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகினார்.

"கடைசிக் கோடைகாலம்" (The last summer) என்ற நாவலை எழுதினார். இவரது சுயசரிதை Safe conduct என்னும் பெயரில் 1931இல் வெளிவந்தது.

ஷேக்ஸ்பியரின் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தும் உள்ளார்.

முதலாம் உலகப் போர்க் காலகட்டத்தில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த காலகட்டத்திலேயே அவர் தனது டாக்டர் ஷிவாகோ என்ற புதினத்துக்கான தகவல்களைப் பெற்றுக்கொண்டார். இப்புதினத்தை அவர் 1948இல் எழுத ஆரம்பித்தவர், அதனை முடிக்க அவருக்கு சுமார் 10 வருட காலம் எடுத்தது.

நோபல் பரிசு

1958இல் டாக்டர் ஷிவாகோ நாவலுக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. எனினும் இப்பரிசை அக்கால அரசின் அழுத்தம் காரணமாக ஏற்க மறுத்துவிட்டார். இந்நாவல் 1988இலேயே ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. 1903ம் ஆண்டு வரையில் மருத்துவராகவும் கவிஞராகவும் திகழ்ந்த யூரி ஷிவாகோவின் வாழ்க்கையைக் கருபொருளாகக் கொண்டதே இப்புதினமாகும். இப்புதினம் பின்னர் 1965ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

மறைவு

பாஸ்ரர்நாக் 30 மே 1960 இல் நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமானார்.

உசாத்துணை

  • இப்னு அஸுமத், ரஷ்ய கவிஞர் எழுத்தாளர் போரிஸ் பாஸ்ரார் நாக், வீரகேசரி, 11-3-2007

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிஸ்_பாஸ்ரர்நாக்&oldid=322786" இலிருந்து மீள்விக்கப்பட்டது